Home
Gaming

நின்டின்டோ வழங்கும் புதிய 3டி வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
நின்டின்டோ வழங்கும் புதிய 3டி வீடியோ கேம் சாதனம்!

நிண்டின்டோவின் 3டிஎஸ் என்ற கேமிங் சாதனம் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏராளமான ரசிகர்கள் இந்த கேமிங் சாதனத்தை வாங்கி கேமிங்கில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் மே மாதத்தில் இருந்து இந்த நிண்டின்டோ 3டிஎஸ் கேமிங் சாதனம் பர்ப்புள் நிறத்துடன் வரும் என்று அறிவித்திருக்கிறது. இந்த பர்ப்பிள் நிறம் இந்த கேமிங் சாதனத்திற்கும் மேலும் அழகையும் ஸ்டைலையும் கொடுக்கும் என்று நம்புகிறது.

ஆனால் விலையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. அதோடு இந்த புதிய 3டிஎஸ் சாதனம் மரியோ டென்னிஸ் ஓபன் கேமையும் கொண்டு வருகிறது. அதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த 3டிஎஸ் கேமிங் சாதனத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது 3டி வசதி கொண்டது. மேலும் வயர்லம் மூலம் இயங்கக்கூடியது. அதுபோல் கேம்களுக்கு ஏற்றார் போல் பல வகையான திரைகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் அனலாக் கண்ட்ரோல், சார்ஜிங் க்ரடில், ஜீரோ சென்சார் வசதி, அகலமான எல்சிடி டிஸ்ப்ளே, மைக்ரோ போன், 3டி ஸ்லைடர், 3டி கேமரா, 2ஜிபி எஸ்டி மெமரி கார்டு மற்றும் மோஷன் சென்சார் என எல்லா வகையான கேமிங் தொழில் நுட்பங்களையும் கொண்டிருக்கிறது.

முதலில் இந்த கேமிங் சாதனம் ஆக்குவா ஊதா, ப்ளேம் சிவப்பு, காஸ்மோ கருப்பு, பெர்ல் பிங் ஆகிய நிறங்களில் வந்தது. தற்போது ராயல் பர்ப்பிள் நிறத்தில் வர இருக்கிறது.

ராயல் பர்ப்பிள் நிறத்துடன் வரும் இந்த கேமிங் சாதனம் ரூ.8500க்கு விற்கப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X