ஹாலிவுட் படத்தை மையமாக கொணடு புதிய வீடியோ கேம்!

Posted By: Karthikeyan
ஹாலிவுட் படத்தை மையமாக கொணடு புதிய வீடியோ கேம்!

வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களைக் குஷிப்படுத்தும் வண்ணம் ஜூலை 20ல் ஒரு புதிய விளையாட்டு களம் இறங்க இருக்கிறது. நியூ பேட்மேன் த டார்க் நைட் ரைசஸ் என்ற ஹாலிவுட் படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விளையாட்டிற்கு நியூ பேட்மேன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய விளையாட்டை கேம்லாப்ட் நிறுவனம் வரும் ஜூலை 20ல் களமிறக்க இருக்கிறது. அதுபோல் த டார்க் நைட் ரைசஸ் என்ற திரைப்படமும் அதே நாள்தான் வெளிவர இருக்கிறது. அதோடு இந்த நியூ பேட்மேன் விளையாட்டு ஆப்பிள் ஐஒஎஸ், கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஜாவா மொபைல் இயங்கு தளங்கள் கொண்ட மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளில் வர இருக்கிறது.

இந்த டார்க் நைட் ரைசஸ் என்ற விளையாட்டில் வரும் கதாநாயகன் பேட்மேன் கோதம் மாநகரத்தை வக்கிர வில்லன்களான பேனே மற்றும் செலினா கைல் அகா பேட்வுமன் ஆகியோரிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இந்த விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

கேம்லாப்ட் நிறுவனம் இந்த விளையாட்டின் ட்ரைலரை ஏற்கனவே யுடியூப்பில் ஏற்கனவே களமிறக்கி இருக்கிறது. அதுபோல் பேஸ்புக் அப்ளிகேசனிலும் இந்த விளையாட்டைப் பற்றிய விவரங்களை அறிவித்திருக்கிறது.

இந்த விளையாட்டிற்கான விலை என்று தெரியவில்லை. வரும் ஜூலை 20 முதல் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் ஜாவா சாதனங்களை வைத்திருப்போர் இந்த விளையாட்டை ரசித்து ஆடலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot