Home
Gaming

நியோஜியோ வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
 நியோஜியோ வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்!
நியோஜியோ எக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு புதிய கையால் இயக்கும் கேமிங் சாதனம் இங்கிலாந்தில் களமிறக்கப்பட இருக்கிறது. இந்த கேமிங் சாதனத்தை ப்ளேஸ் நிறுவனமும் எஸ்என்கே நிறுவனமும் இணைந்து இங்கிலாந்தில் இந்த ஆண்டின் மத்தியில் களமிறக்க இருக்கின்றன.

இந்த கேமிங் சாதனம் பல முக்கிய தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 4.3 இன்ச் அளவு கொண்ட ஒரு எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் மெமரி 2 ஜிபி ஆகும். மேலும் இந்த கேமிங் சாதனத்தில் எஸ்டி கார்டு ஸ்லாட், எவி அவுட் போர்ட் மற்றும் 20 ப்ரீ இன்ஸ்டால்டு டைட்டில்கள் போன்றவையும் உள்ளன.

இந்த நியோஜியோ எக்ஸ் சாதனம் ஜப்பானில் நியோஜியோ கெயிட்டாய் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு நிறத்தில் வரும் இந்த கேமிங் சாதனம் லாஸ்ட் ரிசார்ட், மெஜிஸ்யன் லார்ட், புட்பால் ப்ரன்சி, பேஸ்பால் ஸ்டார்ஸ், ஆர்ட் ஆப் பைட்டிங், கிங் ஆப் த மான்ஸ்டர்ஸ், சைபர் லிப், சூப்பர் சைட்கிக்ஸ், த லிங்க் ஆப் பைட்டர்ஸ் 94, லீக் பவுலிங், பேட்டல் பியூரி, பேட்டல் பியூரி ஸ்பெஷல், சென்கோகு, மெட்டல் ஸ்லக், சாம்ராய் ஷோடவுன், மியூச்சுவேசன் நேஷன், த அல்டிமேட் 11 டாப் ப்ளேயர்ஸ் கோல்ப், நாம் 1975 மற்றும் வேர்ல்டு ஹீரோஸ் போன்ற ப்ரீ இன்ஸ்டால்டு டைட்டில்கள் உள்ளன.

இவை கேமிங் பிரியர்களுக்கு மிக உயர்ந்த அனுபவத்தைத் தரும் என்று நம்பலாம். இந்த கேமிங் சாதனத்தின் விலை ரூ.40000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X