விளையாட்டு பிரியர்களுக்காக புதிய எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர்கள்

Posted By: Karthikeyan
விளையாட்டு பிரியர்களுக்காக புதிய எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர்கள்
எக்ஸ்பாக் 360 என்பது உண்மையாகவே ஒரு உயர்தரமான விளையாட்டு தொழில் நுட்பம். ஆனால் நாளடைவில் இந்த தொழில் நுட்பம் விளையாட்டு பிரியர்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாததால் இப்போது இந்த எக்ஸ்பாக்சின் கன்ட்ரோலர்களுக்கப் பதிலியாக மோஸ்லேப் நிறுவனம் புதிய விளையாட்டு சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய எக்ஸ்பாக் கண்ட்ரோலர்கள் பழையவற்றின் டிசைனையே ஒத்திருக்கின்றன. இந்த புதிய கண்ட்ரோலர்கள் எக்ஸ் பாக்சில் மிக அருமையாக இணைந்து விடும். குறிப்பாக நண்பர்களோடு விளையாடும் போது கிடைக்கும் அனுபவத்தைவிட இந்த கன்ட்ரோலர்கள் சிறந்த அனுபவத்தை வழங்கும்.

இந்த க்ளோசி எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர்கள் பல வழிகளில் கேமிங் கன்சோலை கஸ்டமைஸ் செய்ய பெரிதும் உதவுகிறது. அதாவது இதன் க்ளோசி மற்றும் பளபளக்கும் வண்ணங்கள், டிபேடுகள், ட்ரிக்கர்கள் மற்றும் பம்பர்கள் போன்ற எல்லாவற்றையும் கஸ்டமைஸ் செய்யலாம். இதை பயன்படுத்துவோர் இதன் கணக்கற்ற வழிமுறைகள் மற்றும் எபிஎக்ஸ்ஒய் பட்டன்களைத் தேர்ந்துதெடுத்துக் கொள்ளலாம்.

மோட்ஸ்லேப் நிறுவனம் விண்ணப்பிப்பவர்களின் வீடுகளுக்கே வந்து இந்த எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலரை அளிக்கின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் ஆன்லைன் மூலமும் இந்த கண்ட்ரோலர்களைப் பெறலாம். மேலும் இந்த கண்ட்ரோலர்களுக்கு மோட்ஸ்லேப் நிறுவனம் உத்திரவாதமும் வழங்குகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot