இந்தியாவில் களமிறங்கும் பப்ஜி லைட்.! உங்க சிஸ்டம் இந்த அடிப்படையில் இருக்கானு செக் பண்ணுங்க.!

|

பப்ஜி விளையாட்டு பிரியர்களுக்கு டென்சென்ட் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டென்சென்ட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி பப்ஜி கேமின் லைட் வெர்ஷன் மிக விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்பது தான்.

இந்தியாவில் களமிறங்கும் பப்ஜி லைட்! சிஸ்டம் அடிப்படை இதுவா இருக்கனும்!

பப்ஜி லைட் வெர்ஷன் இதற்கு முன்பு ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகின நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டென்சென்ட் நிறுவனம் இந்திய கேமிங் சந்தையிலும் தனது பப்ஜி லைட் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஹை எண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் மட்டுமே இப்பொழுது இந்திய ரசிகர்கள் பப்ஜி கேமை விளையாடி வருகின்றனர். இதனைச் சரி செய்து, லோ எண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும் பப்ஜி விளையாட்டை அனைவரும் விளையாடுவதற்காக, இந்த பப்ஜி லைட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பப்ஜி லைட் விளையாடத் தேவையான குறைந்தபட்ச கணினி விபரங்கள்

- OS: Windows 7,8,10 64Bit

- CPU: Core i3 @2.4Ghz

- RAM: 4GB

- GPU: Intel HD 4000

- HDD: 4GB

பப்ஜி லைட் விளையாடத் தேவையான அதிகபட்ச கணினி விபரங்கள்

- OS: Windows 7,8,10 64Bit

- CPU: Core i5 @2.8Ghz

- RAM: 8GB

- GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870

- HDD: 4GB

இந்த மாதத்தின் இறுதிக்குள் இந்த பப்ஜி லைட் வெர்ஷன் வெளியிடப்படும் என்று டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி ஜூன் 25 ஆம் தேதி இந்த லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PUBG LITE Coming Soon In India Know The Basic System Requirement : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X