Home
Gaming

அதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.!

இதற்கு முந்தை மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மாடலை விட இதன் ஹார்டுவேரில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இது வேகமாக அதிக சக்தியுடன் செயலபடக் கூடியதாகும்.

By Sugumar A D

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நிறுவனத்துக்கு 2 மாத கால அவகாசம் தேவைப்பட்டது.

அதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்.!

இதற்கு முந்தை மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மாடலை விட இதன் ஹார்டுவேரில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இது வேகமாக அதிக சக்தியுடன் செயலபடக் கூடியதாகும்.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸின் பவர் அடாப்டர் கச்சிதமாக எக்ஸ் உபகரணத்திலேயே பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன் பகுதி மற்றும் மேல் பகுதியின் பினிஷிங் அருமையான முறையில் உள்ளது. எந்த இடத்திலும் வைக்க கூடிய அளவக்கு அதிநவீன தோற்றம் கொண்டுள்ளது. வெப்பம் வெளியேறும் வகையில் யூனிட்டின் பக்கவாட்டில் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு

செயல்பாடு

வடிவமைப்பு குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை என்றாலும், இதன் செயல்பாடு அப்படியே எதிர்மறையாக அமைந்துள்ளது. இதில் 2.3 ஜிகாகெர்ட்ஸ், 8 கோர் ஏஎம்டி ஜாகுவர் பிராசஸர், 12 ஜிபி ராம், 6 தேரா ஃபிளாப் ஏஎம்டி ரேடியான் ஜிபியு ஆகிய அம்சங்கள் உள்ளன. இதன் மூலம் அதிக சக்தியை எ க்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் வெளிப்படுத்தும். இதை சோனி பிளே ஸ்டேஷனுடன் ஒப்பிடும் போது 4.3 தேராஃபிளாப்ஸ், குறைவான திறன் கொண்ட ஜிபியூ, 3 ஜிபி.க்கும் குறைவான ராம் மட்டுமே உள்ளது.

60 ஃபிரேம்கள்

60 ஃபிரேம்கள்

ஒரு விநாடி விஷூவலுக்கு 60 ஃபிரேம்கள் நிலையாக கிடைக்கும் சிஸ்டம் உள்ளது. அதுவும் 1,080பி ரிசல்யூஷனில் கிடைக்கிறது. இதில் கியர்ஸ் ஆப் வார் 4, ஃபோர்ட்நைட், ஃபோர்சா மோட்டார் ஸ்போர்ட் 7, புதிய சீ ஆப் தீவ்ஸ் போன்ற கேம்கள் இதில் சிறப்பாக விளையாடலாம்.

4கே ஹெச்டிஆர்

4கே ஹெச்டிஆர்

சில கேம்கள் விளையாட 4கே ஹெச்டிஆர் மற்றும் 60ஃஎப்பிஎஸ் போன்ற திறன் தேவைப்படும். இதை எதிர்கொள்ளும் திறன் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸில் உள்ளது. ஃபோர்சா மோட்டார் ஸ்போர்ட் போன்ற திறன் கொண்ட கேம்களை அதிக சக்தியுடன் விளையாடக் கூடிய பிளேஸ்டேஷன் சந்தையில் இது மட்டுமே என்று கூறினால் அது மிகையல்ல.

முடிவு

முடிவு

மைக்ரோசாப்ட் நிச்சயம் மிருக பலம் கொண்ட ஒரு சக்தியை சிறிய வடிவத்தில் உருவாக்கியிருக்கும். எனினும் எக்ஸ்பாக்ஸ்க்கு என்று பிரேத்யேக திறன்களை ஏற்படுத்த அது நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். சோனி குறைந்த சக்தியை கொண்டது. எனினும் இது போன்ற காரணத்தால் மைக்ரோசாப்டை அது எளிதில் வீழ்த்திவிடும். எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் என்பது அதிக சக்தி கொண்டது. சிறந்த திறன், 4கே கேம்களை விளையாடக் கூடிய திறன் கொண்டதாகும்.

 விலை

விலை

இதன் விலை ரூ.40,990 ஆகும். இது பிளேஸ்டேஷன் ப்ரோவை விட அதிகம். எனினும் இது உயர் திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் பிரத்யேக பிரான்சிஸிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் சோனி ராஜாவாக இருந்தாலும், ராஜா தன்னை பலம் கொண்டவன் என்று நிரூபிக்க சில விஷயங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

Best Mobiles in India

English summary
Microsoft Xbox One X Review: Full of power but few things to lift: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X