Home
Gaming

மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி குறைப்பு

By Karthikeyan
மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி குறைப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக் 360 பெட்டியை குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த எக்ஸ்பாக் 360 விற்பனைக்கு வந்துவிடும். குறிப்பாக இந்த அறிவிப்பின் மூலம் இளசுகள் தங்கள் கேமிங் கனவுகளை நனவாக்க முடியும்.

இந்த எக்ஸ்பாக் 360 பெட்டி ஒரு 4ஜிபி சாதனத்தையும் மற்றும் ஒரு கினக்ட் சென்சாரையும் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த எக்ஸ்பாக் ரூ.5000க்கு விற்கப்படுகிறது. மேலும் மாதம் ரூ.750 மூலம் இரண்டு வருடம் பணம் கட்டி இந்த எக்ஸ்பாக்ஸை வாங்கலாம். இந்த இரண்டு வருடத்தில் எக்ஸ்பாக்ஸ் லைப் கோல்டை அனுபவிக்க முடியும்.

இந்த எக்ஸ்பாக் ஒரு வீடியோ கேம் சாதனமாக மட்டும் இல்லாமல் வீட்டில் பயன்படுத்தும் பொழுதுபோக்க சாதனமாகவும் இருக்கிறது. இந்த எக்ஸ்பாக்ஸில் ஏராளமான ஆன்லைன் பொழுதுபோக்கு அப்ளிகேசன்கள் உண்டு.

இந்த எக்ஸ்பாக்ஸ் கேமிங் சந்தையில் கடந்த ஆறரை ஆண்டுகளாக வெற்றிப் பவனி வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 15 மாதங்களாக இந்த எக்ஸ்பாக்ஸ் மற்ற கேமிங் சாதனங்களை விட அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்போது இந்த எக்ஸ்பாக்ஸ் குறைந்த விலைக்கு வரவிருப்பதால் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வி யு மற்றும் நிண்டின்டோ போன்ற கேமிங் சாதனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க முடியும் என்று மைக்ரோசாப்ட் நம்புகிறது.

எது எப்படியோ இனி கேமிங் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X