Home
Gaming

ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய வீடியோ கேம்!

By Karthikeyan
 ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய வீடியோ கேம்!

கடந்த ஏப்ரல் முதல் ஒரிஜினல் மேக்ஸ் பைன் விளையாட்டு ஐஒஎஸ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விளையாட்டு வரும் ஜூன் 14 முதல் ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடிய சாதனங்கள் ஏராளமாக இருப்பதால் மேக்ஸ் பைனின் உரிமையாளரான ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இந்த மேக்ஸ் பைன் விளையாட்டை சப்போர்ட் செய்யும் ஆன்ட்ராய்டு சாதனங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது.

அதன்படி மோட்டோரோலா ரேசர், ரேசர் மேகஸ், மோட்டோரோலா அட்ரிக்ஸ், மோட்டோரோலா போட்டோன், மோட்டோராலா ட்ராய்டு பியோனிக், எச்டிசி ரிசவுண்ட், எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் எஸ், எச்டிசி இவோ 3டி, எச்டிசி சென்சேசன், எச்டிசி ட்ராய்டு இன்கிரடிபிள் 2, சாம்சங் கேலக்ஸி நெக்சுஸ், சாம்சங் நெக்சுஸ் எஸ், சாம்சங் கேலக்ஸி நோட், சாம்சங் எஸ்2, சாம்சங் கேலக்ஸி ஆர், சாம்சங் எக்ஸ்பிரியா ப்ளே, சாம்சங் எக்ஸ்பிரியா எஸ் மற்றும் சோனி வாக்மேன் ஸட் சிரீஸ் மீடியா ப்ளேயர் போன்ற ஆன்ட்ராய்டு போன்கள் இந்த மேக்ஸ் பைன் விளையாட்டை சப்போர்ட் செய்யும்

அதுபோல் ஏசர் ஐகோனியா, ஆசஸ் இஇஇ பேட் ட்ரான்ஸ்பார்மர், ஆசஸ் இஇஇ பேட் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம், டெல் ஸ்ட்ரீக் 7, எல்ஜி ஆப்டிமஸ் பேட், மீடியன் லைப்டேப், மோட்டோரோலா சூம், சாம்சங் கேலக்ஸி டேப் 8.9 / 10.1, சோனி டேப்லெட் எஸ், சோனி டேப்லெட் பி, தோஷிபா த்ரைவ், எச்டிசி ப்ளையர் மற்றும் எச்டிசி ஜெட்ஸ்ட்ரீம் போன்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் இந்த விளையாட்டை சப்போர்ட் செய்யும்.

மேலும் வரும் காலங்களில் இந்த வளையாட்டை சப்போர்ட் செய்யும் சாதனங்களை ராக்ஸ்டார் நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே வரும்.

மேலும் இந்த மேக்ஸ் பைன் விளையாட்டை ஐபோன் 3ஜிஎஸ், ஐபோன் 4, ஐபோன் 4எஸ் ஐபோட் டச் 4ஜி, ஐபேட் 1, ஐபேட் 2 மற்றும் புதிய ஐபேட் ஆகிய ஆஒஎஸ் சாதனங்களும் சப்போர்ட் செய்யும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X