கம்ப்யூட்டர் கேமிங் மற்றும் கன்சோல் கேமிங்: முக்கிய வேறுபாடுகள்

By: Meganathan S

கேமிங் ப்ரியர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் வாக்குவாதங்களில் ஒன்று கேமிங் அனுபவம் சிறப்பாக வழங்குவது கம்ப்யூட்டரா அல்லது கேமிங் கன்சோல்களா என்பது தான். இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றாலும், இதுகுறித்த முடிவை தெரிந்து கொள்ளும் முன் பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

கம்ப்யூட்டர் கேமிங் மற்றும் கன்சோல் கேமிங்: முக்கிய வேறுபாடுகள்

முதல் முறை கேமிங் செய்வோருக்கு கம்ப்யூட்டர்களில் விளையாடப்படும் கேம்கள். கன்சோல் கேம்கள் அனைத்தும் வெவ்வேறு கேமிங் நிறுவனங்களின் சொந்த தயாரிப்பு ஆகும். இந்த கேம்களை வெவ்வேறு கன்சோல்களில் விளையாட முடியும். இவற்றில் பிரபலமாக இருப்பது மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ், சோனி பிளே ஸ்டேஷன், நின்டென்டோ கேம் கியூப் மற்றும் நின்டென்டோ வை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விலை:

விலை:

விலையை பொருத்தவரை கன்சோல்களை விட கணினிகளின் விலை அதிகம். பிரத்தியேக கம்ப்யூட்டர் கேம்கள் அனைத்தும் கன்சோல் கேம்களை விட விலை அதிகம் ஆகும்.

அப்கிரேடு:

அப்கிரேடு:

கேமிங் கன்சோல்களை அப்கிரேடு செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். இவற்றுக்கான அப்டேட்கள் அரிதாக வழங்கப்படுவதே இதற்கு காரணம் ஆகும். கன்சோல் கேமர்களுக்கு இது பின்னடைவான விஷயம் ஆகும். இதுவே கணினிகளை அப்கிரேடு செய்வது மிகவும் எளிமையான காரியம் ஆகும், எனினும் இவற்றின் விலை அதிகமே.

பட்ஜெட் விலையில் கேமிங் செய்வோர் எனில் சில பிராசஸர்கள், ஜிபியு மற்றும் ரேம் உள்ளிட்டவற்றை மூன்று அல்லது நான்கு வருடங்கள் வரை எளிமையாக பயன்படுத்தலாம்.

கன்சோல் பிரத்தியேகங்கள்:

கன்சோல் பிரத்தியேகங்கள்:

எக்ஸ் பாக்ஸ் மற்றும் சோனி பிளே ஸ்டேஷன்களுக்கு என பல்வேறு பிரத்தியேக கேம்கள் உள்ளன. எக்ஸ் பாக்ஸ் வைத்திருப்போர் பிளே ஸ்டேஷன் கேம்களையும், பிளே ஸ்டேஷன் வைத்திருப்போர் எக்ஸ் பாக்ஸ் கேம்களையும் விளையாட முடியாது.

எனினும் கம்ப்யூட்டரில் தலைசிறந்த கேம்களை விளையாட முடியும். சோனி சமீபத்தில் பிளே ஸ்டேஷன் ந்தா செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு சந்தா செலுத்தி கம்ப்யூட்டர்களில் கேம் விளையாடலாம். இதே போல் மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் எக்ஸ் பாக்ஸ் பிளே கேம்களை எதிலும் விளையாடலாம்.

கண்ட்ரோல்:

கண்ட்ரோல்:

கன்சோல் ஜாய் ஸ்டிக்களை விட கீபோர்டு மற்றும் மவுஸ் கேமர்களுக்கு தலைசிறந்த கண்ட்ரோல்களை வழங்குகிறது. எனினும் சில கேம்களை எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலர் மற்றும் டூயல்ஷாக் 4 கொண்டு மட்டும் விளையாடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கேம்களை கம்ப்யூட்டர்களில் மகிவும்எ ளிதாக விளையாட முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Hard Core gamers always come up with the argument which platform is the best for gaming -- PC or Console.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்