வீடியோ கேம் விளையாடுவதற்கு புதுமையான கீபோர்டு!

By Karthikeyan
|
வீடியோ கேம் விளையாடுவதற்கு புதுமையான கீபோர்டு!

வீடியோ விளையாட்டு உபகரணங்களைத் தயாரித்து வழங்கும் மேட் கேட்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய கேமிங் கீபோர்டை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமிங் கீபோர்டிற்கு எஸ்.டி.ஆர்.ஐ.கே.இ7 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 5 இன்டர் லாக்கிங் மாடுல்களுடன் வரும் இந்த கீபோர்ட் முற்றிலும் உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முக்கிய 5 இன்டர்லாக்கிங் மாடுல்களாக முக்கிய கீபோர்ட், பால்ம் ரெஸ்ட், நம்பேட், பங்க்சன் ஸ்ட்ரிப் மற்றும் வி.இ.என்.ஒ.எம் தொடுதிரை ஆகியவை இருக்கின்றன.

முக்கிய கீபோர்ட் மிக ஸ்டைலாக இருக்கிறது. இந்த கீபோர்ட் இன்டர் சேஞ்சபுள் டபுள்யுஎஎஸ்டி, ஆரோ கீகள் மற்றும் முழு ஆர்ஜிபி பேக்லைட்டிங் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன.

பால்ம் ரெஸ்ட் மற்றும் நம்பேட் ஆகியவை பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கின்றன. பால்ம் ரெஸ்ட், ஸ்க்ரோல் வீல், ஆக்சன் பட்டன், ஆரோ கீகள் மற்றும் 5 மேக்ரோ பட்டன்களைக் கொண்டிருக்கின்றன.

பங்க்சன் ஸ்ட்ரிப் 4 மேக்ரோ பட்டன்களைக் கொண்டுள்ளன. மொத்தத்தில் இந்த புதிய கேமிங் கீபோர்ட் 24 ப்ரோக்ராம் கீகளைக் கொண்டுள்ளன. ஆனால் இந்த கீபோர்டில் யுஎஸ்பி இணைப்பு வசதி இல்லை.

இந்த கேமிங் கீபோர்டில் டீம் ஸ்பீக் பங்க்சனாலிட்டி மற்றும் விசுவல் ஐடென்டிபையர் போன்றவை உள்ளதால் ஆன்லைனில் விளையாடும் போது ஆன்லைனில் உள்ள மற்றவர்களைப் பார்க்க முடியும். அதோடு விளையாடிக் கொண்டிருக்கும் போதே அவர்களோடு உரையாட சாட் செய்ய முடியும்.

இந்த புதிய கேமிங் கீபோர்ட் 300 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X