வீடியோ கேம் கன்ட்ரோல் வசதியுடன் புதிய மவுஸ்!

Posted By: Karthikeyan
வீடியோ கேம் கன்ட்ரோல் வசதியுடன் புதிய மவுஸ்!

கணினி அல்லது லேப்டாப்பில் விளையாடும் போது அதை நெறிப்படுத்தும் சாதனம் மிக இன்றியமையாத ஒன்றாகும். அவ்வாறு அந்த சாதனம் மிக அருமையாக அமைந்துவிட்டால் சூப்பராக விளையாட முடியும். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை அதாவது விளையாட்டை நெறிப்படுத்தும் புதிய மவுசை அறிமுகப்படுத்துகிறது மேட் கேட்ஸ் நிறுவனம்.

இந்த மவுசின் பெயர் சைபோர்க் எம்.எம்.0.7. ஆகும். இதன் ஸ்டைல் மிக அற்புதமாக உள்லது. பலவிதமான வண்ணங்களில் வந்திருக்கிறது. இதன் பட்டன்கள் மற்றும் ஸ்க்ரோல் செய்யும் சக்கரம் ஆகியவை ஆரஞ்சு நிறத்தில் வந்திருக்கிறது. இதன் பெரும்பாலான பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.

7 புதிய இன்புட்டுகள் இந்த மவுசில் உள்ளன. ஒரு வட்ட வடிவ நப் உள்ளது. அடுத்ததாக 5 டைரக்கசனல் ராக்கர் உள்ளது. அதுபோல் இதன் பழைய மாடலை விட புதிதாக 4 இன்புட்டுகளும் உள்ளன. அதுபோல் இதில் 2 துணை டோக்குள்களும் உண்டு. இதன் பக்கவாட்டில் லாக் பட்டனும் உண்டு.

ஸ்க்ரோல் சக்கரத்திற்கு கீழ் பகுதியில் ஒரு டிபிஐ அட்ஜஸ்டிங் சுவிட்ச் உள்ளது. இந்த சுவிட்ஜ் இந்த மவுசின் சென்சிட்டிவிட்டியை அட்ஜெஸ்ட் செய்கிறது. மேலும் இதில் ஹெக்ஸ் கீகளும் உண்டு. இதன் விலை ரூ.6,500 ஆகும். இந்த மவுஸ் இருந்தால் வீடியோ கேம் பரவசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot