Subscribe to Gizbot

இந்த வாரத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வெளியாக உள்ள கேம்கள்

Posted By: Jijo Gilbert

ஒவ்வொரு வாரமும் வெளியிடுவது போல, இந்த வாரமும் எக்ஸ்பாக்ஸ் ஒன் தரப்பில் இருந்து கேம்கள் வெளியிடப்படுகின்றன. இதில் ஃபார் க்ரை 5, எக்ஸ்-மார்ப்: டிஃபென்ஸ் மற்றும் பல கேம்கள் உட்படுகின்றன.

இந்த வாரத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வெளியாக உள்ள கேம்கள்

தற்போதைய சந்தையில் கேம்களை அளிக்கக் கூடிய சிறந்த ஆதாரங்களில் எக்ஸ்பாக்ஸ் ஒன்-னும் ஒன்றாக உள்ள நிலையில், மீண்டும் சில புதிய கேம்களின் மூலம் தனது பங்களிப்பை அளிக்க தயாராகி வருகிறது. கேம்களை குறித்த தகவல்களை அளிப்பதற்கு முன், எக்ஸ்பாக்ஸ் ஒன்-னின் முக்கியத்துவம் மற்றும் அம்சங்களைக் குறித்து சுருக்கமாக காண்போம்.

ஏற்கனவே நாங்கள் வெளியிட்ட சில கட்டுரைகளில் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸின் அம்சங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த காரியங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ், ஒரு 2.3ஜிஹெச்இசட் 8-கோர் ஏஎம்டி சிபியூ-யைப் பெற்று, 12ஜிபி ஜிடிடிஆர்5 கிராஃபிக்ஸ் நினைவகத்தை கொண்டு 326ஜிபி/வினாடி வேகத்தில் உள்ளடக்கங்களை அளிக்க வல்லது.

இந்த கச்சிதமான கேமிங் கன்சோலில் 1 டிபி ஹெச்டிடி உள்ளக நினைவகம் இருப்பதோடு, கிராஃபிக்ஸை இயக்க 6-டெராஃபிளாப் ஏஎம்டி ராடியன் ஜிபியூ-வை பயன்படுத்தி கொள்கிறது. இது ஹெச்டிஆர் 10-யைக் கூட ஆதரிக்கிறது. மேலும் உள்கட்டமைப்பு கொண்ட 4கே அல்ட்ரா ஹெச்டி ப்ளூ-ரே பிளையர் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு ஆகியவற்றை பெற முடிகிறது. இதை குறித்த முழுமையான கட்டுரையை இங்கு படிக்கலாம்.

இப்போது இந்த வாரம் எக்ஸ்பாக்ஸ் ஒன்-னில் வெளியாக உள்ள கேம்களின் பட்டியலை கீழே காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எக்ஸ்-மார்ப்: டிஃபென்ஸ் - யூரோப்பியன் அஸ்சால்ட்

எக்ஸ்-மார்ப்: டிஃபென்ஸ் - யூரோப்பியன் அஸ்சால்ட்

எக்ஸ்-மார்ப் டிஃபென்ஸ் என்ற கேமை சார்ந்து, அதன் தொடர்ச்சியாக இந்த கேம் அமைந்துள்ளது. முந்தைய கேமின் ஒரு சேர்ப்பாக அமையும் இது, யூரோப்பியன் ஃபிரண்டில் நடைபெறும் முக்கிய முகாமை அடிப்படையாக கொண்ட கதையில் அமைந்துள்ளது. ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, இந்த கேமின் கதை, முக்கிய கேமை சார்ந்ததாகவே அமைந்துள்ளது என்பதோடு, எக்ஸ்-மார்ப் படையெடுப்பை எதிர்த்து போராட முயற்சிக்கும் யூரோப்பியன் ராணுவப் படைகளை மையமாக கொண்டது.

பார் க்ரை 5

பார் க்ரை 5

யூபிசாஃப்ட் மான்ட்ரியல் மேம்படுத்தி உள்ள இந்த அதிரடி சாகசங்கள் நிறைந்த முதல் நபர் சுடும் வீடியோ கேம், பிளேஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் ஆகியவற்றில் கிடைக்கப் பெறுகிறது.

டிரோவ்: ஹீரோஸ்

டிரோவ்: ஹீரோஸ்

டிரோவ் வழங்கும் நியோன் சிட்டி பயோமி கேம் பதிப்பின் ஒரு சேர்ப்பாக, இந்த கேம் வெளியிடப்படுகிறது. இந்த துணை பயோமி கேம், நியோன் சிட்டி உடன் சேர்க்கப்பட்டு லுமினோபோலிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பயோமி என்ற இடத்தில் தான் ஹீரோஸின் (கேமில் உள்ள கதாபாத்திரங்கள்) அதிரடி சாகசங்கள் நடைபெறுகின்றன. இந்த வாரத்தில் இருந்து எக்ஸ்பாக்ஸ் வீக்கில் இந்த கேம்மை பயனர்கள் விளையாடலாம்.

ஏப்ரல் 2- ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் ஹானர் 7ஏ அறிமுகம்.!

ஸ்பேஸ் ஹல்க் அஸ்சினியன்:

ஸ்பேஸ் ஹல்க் அஸ்சினியன்:

இது ஒரு முப்பரிணாம கேம் என்பதோடு, டிஜிட்டலுக்கு மாற்றத்தை அடிப்படையாக கொண்ட கேம் தன்மையை அளித்து, பாரம்பரியமான போர்டு கேம் அனுபவத்தை பெற முடிகிறது. இந்த கேமில் 3 அதிகாரங்கள் காணப்படுகின்றன. மேலும் ஒற்றை ஆட்டக்காரருக்கு கூடுதலாக புதிய அம்சங்கள் அளிக்கப்படுகின்றன.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
அல்டரிக்

அல்டரிக்

இந்த கேமில் ஒரு பயனரால் கொதித்து பொங்கும் லாவா வழியாக குதித்து போக முடியும். கண்ணிகள் மற்றும் வெட்டக் கூடிய கத்திகளில் இருந்து ஓடுவதோடு, தாழ்வாரத்தில் இருந்து சறுக்குதல் மற்றும் மேல் நோக்கி ஏறுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு ஒத்த பரிணாமத்திற்கு மொத்தமாக மாற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Just like every another week Xbox One has got a bunch of new games for the gamers to enjoy. The new games include Alteric, X-morph: Defense - European Assault, Far Cry 5 and other games. Speaking of the Xbox hardware, the device is backed by a 2.3Ghz 8-core AMD CPU and has a 12GB GDDR5 graphical memory that pushes content at 326GB/s.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot