Home
Gaming

ஏராளமான வீடியோ கேம்களுடன் வரும் புதிய சாதனம்!

By Karthikeyan
ஏராளமான வீடியோ கேம்களுடன் வரும் புதிய சாதனம்!

சமீபத்தில் ஜேஎக்ஸ்டி நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு வீடியோ விளையாட்டுச் சாதனத்தைக் களமிறக்கி இருக்கிறது. இந்த வீடியோ விளையாட்டுச் சாதனத்திற்கு ஜேஎக்ஸ்டி எஸ்5100 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு 2.3.4 இயங்கு தளத்தில் இயங்குகிறது. பார்ப்பதற்கு சோனியின் ப்ளே ஸ்டேசனைப் போல் இருக்கும் இந்த சாதனம் மிக சூப்பராக இயங்கக்கூடியது.

இந்த கேமிங் சாதனத்தில் பல ஏராளமான புதிய தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக இதில் 1 ஜிஹெர்ட்ஸ் அம்லாஜிக் எம்3 எஆர்எம் கோர்ட்டெக்ஸ்-எ9 ப்ராசஸர் உள்ளதால் இது மிக விரைவாக இயங்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக இதில் எஆர்எம் மாலி 400 ஜிபியு உள்ளதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக எளிதாகச் செய்ய முடியும்.

இதன் 5 இன்ச் டிஸ்ப்ளேயில் முழுமையான எச்டி விளையாட்டை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் இந்த சாதனம் 512எம்பி கொண்ட ரேமுடன் வருகிறது. இதன் 4ஜிபி சேமிப்பை மைக்ரோ டிஎப் கார்டு ரீடர் மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதில் இருக்கும் முகப்பு கேமரா மூலம் மிக சூப்பரான வீடியோ உரையாடலையும் நடத்த முடியும்.

இந்த விளையாட்டு சாதனம் ஏராளமான மல்டி மீடியா பார்மட்டுகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எம்பிஇஜி-1, எவிஐ, டிஐவிஎக்ஸ், டபுள்யுஎம்வி மற்றும் பாப்புலர் ப்ளாஷ் போன்ற பார்மட்டுகளைக் கொண்டுள்ளது. இதில் வைபை உள்ளதால் ஆன்லைன் விளையாட்டுகளையும் அட்டகாசமாக விளையாடலாம்.

அதோடு இது 100க்கும் அதிகமாக வீடியோ விளையாட்டுகளுடன் களம் இறங்குகிறது. இதில் உள்ள கிராவிட்டி சென்சார் மிக உச்ச வீடியோ விளையாட்டு அனுபவத்தை அளிக்கும்.

இந்த சாதனம் சிறியதாக இருப்பதால் இதை மிக எளிதாக தூக்கிச் செல்ல முடியும். இந்த சாதனம் 106 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X