Home
Gaming

ஸ்மார்ட்போனை கேமிங் ரிமோட்டாக மாற்றும் புதிய அப்ளிகேசன்!

By Karthikeyan
 ஸ்மார்ட்போனை கேமிங் ரிமோட்டாக மாற்றும் புதிய அப்ளிகேசன்!

சமீபத்தில் ரோசட் நிறுவனம் பவர் க்ரிட் என்ற ஒரு அப்ளிகேசனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அப்ளிகேசன் ஸ்மார்ட் போன்களை ரிமோட்டாக மாற்றும் சக்தி கொண்டது. அதாவது வீடியோ கேம்களை இயக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் ரிமோட்டாக ஸ்மார்ட்போன்களை மாற்றிவிடும் இந்த பவர் க்ரிட்.

இந்த பவர் க்ரிட் ஒரு இலவச அப்ளிகேசன் ஆகும். இதை இலவசமாக ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்ய முடியும். இந்த சாப்ட்வேர் 4 கட்டுப்பாட்டு ட்ஸ்ப்ளேகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு டிஸ்ப்ளேயும் தனித்தனியான வேலைகளைச் செய்யும். அதாவது இதில் 3 டிஸ்ப்ளேகள் கேம்களுக்குத் தேவையான முக்கிய கருவிகளைக் கொண்டிருக்கும். நான்காவது டிஸ்ப்ளே ஒரு சில ஷாட்கட்டுகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் இதைப் பயன்படுத்துவோர் தமக்கு விருப்பமான வைகையில் வீடியோ கேம் விளையாட முடியும்.

இந்த பவர்-க்ரிட் சாப்ட்வேர் ஏராளமான கஸ்டமைசின் வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வசதிக்கு ஏற்றார்போல ஷாட்கட்டுகளையும் பட்டன்களையும் உருவாக்க முடியும். எடுத்தக்காட்டாக ஸ்மார்ட்போனில் ஆன்ஸ்க்ரீன் கீபோர்டை உருவாக்க விரும்பினால் இந்த சாப்ட்வேர் மூலம் மிக எளிதாக உருவாக்க முடியும்.

இந்த பவர்க்ரிட் சாப்ட்வேரில் இருக்கும் இன்கம்மிங் சென்டர் என்ற வசதி விளையாடிக் கொண்டிருக்கும் போதே பேஸ்புக் மற்றும் ஸ்கப் உரையாடல்களில் வாடிக்கையாளர்களைப் பங்குபெற வைக்கிறது. இதன் மூலம் விளையாடிக் கொண்டே ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கைப் அழைப்பை எடுக்க முடியும். அல்லது ஸ்கப் மூலம் செய்திகளைப் பகிர முடியும்.

இந்த சாப்ட்வேர் முதலில் இலவசமாக வருகிறது. ஆனால் வரும் காலங்களில் இந்த சாப்ட்வேரில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டால் அவற்றைப் பெற பணம் செலுத்த வேண்டும். தற்போது இந்த அப்ளிகேசன் ஆப்பிள் ஐபேடுகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் காலங்களில் இந்த வசதி எல்லா ஆன்ட்ராய்டு போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X