பப்ஜி கேமிற்கு போட்டியாக இந்திய விமானப்படை வெளியிடும் IAF மொபைல் கேம்!

|

வேகமாக வளர்ந்து வரும் வீடியோ கேம் துறையில், இந்திய விமானப்படை முதல் முறையாகக் கால் பதித்துள்ளது.

இந்தியர்களின் தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விமானப்படை புதிய IAF என்ற மொபைல் கேமை அறிமுகம் செய்துள்ளது.

கேமில்

கேமில் "MIG 21" விமானம்

இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்த புதிய IAF மொபைல் கேம் பற்றிய பதிவை ஒரு சிறிய டீஸர் உடன் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ கேமில் ரஷ்யா தயாரித்த போர் விமானமான "MIG 21" விமானம் கூட இடம்பெற்றுள்ளது.

‘அபிநந்தத் வர்தமன்' அவதார்

‘அபிநந்தத் வர்தமன்' அவதார்

இந்த புதிய மொபைல் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்திலும் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் முக்கிய அவதார் கேரக்டரில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ‘அபிநந்தத் வர்தமன்' உருவாக்கப்பட்டுள்ளார்.

<span style=கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா? " title="கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா? " loading="lazy" width="100" height="56" />கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா?

IAF மொபைல் கேம்

IAF மொபைல் கேம்

இந்த IAF மொபைல் கேம் இல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற பல விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேமின் கிராபிக்ஸ் தரமும் அட்டகாசமாக உள்ளது. பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள், லெண்டிங் தளங்கள், பைலட்கள் என முழு விமானப்படையை கண்முன் காட்டுகிறது இந்த கேம்.

<span style=50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்! எதற்கு? " title="50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்! எதற்கு? " loading="lazy" width="100" height="56" />50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்! எதற்கு?

பப்ஜி கேமிற்கு போட்டியாக IAF கேம்

பப்ஜி கேமிற்கு போட்டியாக IAF கேம்

எதிரிகளின் ப்ரோ விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் மிஷன், அடுத்தநாட்டு எல்லைக்குள் ஊடுருவி வெளி வரும் மிஷன் போன்று பல விதமான கேமிங் விளையாட்டை இந்த கேமில் இந்திய விமானப்படையினர் உருவாக்கியுள்ளனர். பப்ஜி கேமிற்கு போட்டியாக இந்த IAF கேம் இந்தியாவில் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<span style=சென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது. " title="சென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது. " loading="lazy" width="100" height="56" />சென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.

விரைவில் வெளியீடு

விரைவில் வெளியீடு

இந்த புதிய IAF மொபைல் கேம் வரும் ஜூலை 31, முதல் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. தற்பொழுது சிங்கள் பிளேயர் மோடு மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது. அடுத்து வரவிருக்கும் வாரங்களில் மல்டி பிளேயர் மோடு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Air Force Mobile Game Announced In Both Android And iOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X