Home
Gaming

ஐசிஇ வழங்கும் மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Karthikeyan
ஐசிஇ வழங்கும் மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்!

மின்னனு பொருள்களை வழங்கும் நிறுவனமான ஐசிஆ எக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் முதல் முறையாக இந்திய சந்தையில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்க இருக்கி இருக்கிறது. 7 இன்ச் அளவு டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டிற்கு ஐசிஇ எக்ஸ்ட்ரீம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த எக்ஸ்ட்ரீம் டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் இயங்கு திறன் பக்காவாக இருக்கும். இதன் திரை தொடு வசதி கொண்டுள்ளது. அதோடு இது 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும். அதோடு இது 3ஜி கண்டென்டுகளையும் சப்போர்ட் செய்யும். அதற்கான எச்டிஎம்ஐ போர்ட்டும் இந்த டேப்லெட்டில் உள்ளது.

இதன் 2எம்பி கேமரா சூப்பரான படங்களை எடுக்கும். 16ஜிபி சேமிப்புடன் வரும் இந்த டேப்லெட்டின் 8ஜிபி சேமிப்பை பயன்படுத்த முடியும். அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இந்த சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும். இந்த டேப்லெட்டில் மாலி-400 ஜிபியு உள்ளதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் அம்சமாக செய்ய முடியும்.

இந்த புதிய டேப்லெட் 100க்கும் அதிகமான அப்ளிகேசன்களுடன் வருகிறது. இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த டேப்லெட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.

விலையைப் பொருத்த மட்டில் இந்த டேப்லெட் இந்திய வாடிக்கையாளர்களில் மனத்தை புரிந்தது போல் மலிவு விலைக்கு வருகிறது. அதாவது இந்த டேப்லெட் ரூ.6,999க்கு விற்கப்படுகிறது. இந்த டேப்லெட்டை ncarry.com ஆன்லைன் மூலம் வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X