எச்பி வழங்கும் ஆல் இன் ஆல் ஒர்க் ஸ்டேசன்!

Posted By: Karthikeyan
எச்பி வழங்கும் ஆல் இன் ஆல் ஒர்க் ஸ்டேசன்!

எச்பி நிறுவனம் ஒரு புதிய ஸட்1 என்ற ஆல் இன் ஒன் ஒர்க் ஸ்டேசனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் ஒர்க் ஸ்டேசனில் எச்பி தனது அனைத்துத் திறமைகளையும் வெளிக் கொணரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸட்1 ஒர்க் ஸ்டேசன் சிஎடி அல்லது 3டி மாடலிங் அல்லது க்ராபிக்ஸ் இன்டென்சிவ் அப்ளிகேசன் துறையில் ஈடுபடுவோருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மிகவும் நெகிழ்வுதன்மை கொண்டதாகும். இதை மிக எளிதாக இயக்கலாம். அதே நேரத்தில் மிக எளிதாகவும் அப்க்ரேட் செய்யவும் முடியும். இதன் ஹார்ட்வேரை மிக எளிதாக நிறுவவும் முடியும்.

இந்த ஸட்1 சாதனம் ஒரு நிறவனத்திற்கு தேவையான அத்தனை தேவைகளையும் சரியாகச் செய்து முடிக்கும். இந்த சாதனத்தில் விருப்பமான இயங்குதளங்களை பயன்படுத்த முடியும். அதாவது விண்டோஸ் 7 ப்ரபசனல், எச்பி லினக்ஸ் அல்லது சுசி லினக்ஸ் போன்ற எந்த இயங்குதளத்தையும் பயன்படுத்தலாம்.

இந்த ஸட்1 சாதனத்தின் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இது இன்டல் சி206 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் இன்டல் எக்சியோன் மற்றும் இன்டல் கோர் ப்ராசஸர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. டிஸ்ப்ளே போர்ட் மூலமாக இந்த சாதனம் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேயை சப்போர்ட் செய்கிறது.

ஸட்1 சாதனத்தின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 27 இன்ச் அளவைக் கொணட்டிருக்கிறது. இதன் உயரம் 23.0 இன்ச், அகலம் 26.0 இன்ச் மற்றும் தடிமன் 16.5 இன்ச் ஆகும். இதன் பிக்சல் 2560x1440 ஆகும். மேலும் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். அதோடு இந்த வொர்க் ஸ்டேசன் 400 வாட்ஸ் மின்திறனைக் கொண்டிருக்கிறது.

இந்த ஒர்க் ஸ்டேசனின் முகப்பில் 2 கூம்பு வடிவ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை எஸ்ஆர்எஸ் ப்ரீமீயம் ஒலி அமைப்பை வழங்குகின்றன. மேலும் இந்த சாதனத்தில் எச்டி 1080பி 2.0 மெகா பிக்சல் வெப்காமும் உண்டு. இதன் டிஸ்ப்ளே டயகோனல் எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் ஆகும். அதுபோல் இது க்வாட் கோர் இன்டல் எக்சியோன் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸட்1 இன்டல் கோர் மற்றும் எக்சியோன் எச்டி க்ராபிக்சை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் இதன் செயல் திறனும் மிக பக்காவாக இருக்கும். அதுபோல் இது ஒரு உறுதியான சாதனம் ஆகும். இதில் 3டி க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும். மேலும் இந்த சாதனத்தில் சேமிப்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. அதாவது 7.2கே மற்றும் 10கே சட்டா, ரெய்டு, ஆப்டிக்கல் ட்ரைவ்கள், எஸ்எஸ்டி வசதிகள் மற்றும் மீடியா கார்டு ரீடர் போன்ற எந்த சேமிப்பு வசதியையும் தேர்ந்து கொள்ளலாம்.

இந்த எச்பி ஸட்1 ஒர்க் ஸ்டேசனின் விலை ரூ.100000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot