நாள்தோறும் 7,000 'திருட்டுகள்' : கேஸ்பர்ஸ்கை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

Written By:

7,000 திருட்டுக்களா? எந்த ஊர்ல? என்ன திருடினாங்க? பணமா? நகையா? என கேள்விகள் கேட்பவர்களுக்கு, இதுவொரு தொழில்நுட்பம் சார்ந்த இணையதளம் என்பதை நியாபகப்படுத்துகிறோம்.

நாள்தோறும் 7,000 'திருட்டுகள்' : கேஸ்பர்ஸ்கை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்ப

தினந்தோறும் சராசரியாக 7,000 திருட்டுகள் நடப்பது கணினி சார்ந்த தகவல்களை கைப்பற்றுவதற்காக. இதுகுறித்து 'கேஸ்பர்ஸ்கை' என்ற வைரஸ் தடுப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி,
"2012ல் நாளொன்றிற்கு சராசரியாக 7,000 ஹேக்கள் நடத்தப்பட்டன. அதிலும் கணினி விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்களையே அதிகம் குறிவைத்தார்கள்"

மேலும் நீங்கள் கேம்களில் மூழ்கும்பொழுதே, உங்களுடைய கணினியை இணையத்துடன் இணைப்பை ஏற்படுத்தி முக்கியத்தகவல்களை திருடுவார்களாம்.

புகைப்படங்களுக்கும் உயிர் உள்ளது

கணினி சார்ந்த விளையாட்டுக்களின் மீதான மோகம் அதிகரித்துள்ளதால், ஹேக்கர்கள் புதிதாக விளையாட்டுக்களை வடிவமைத்தோ, அல்லது பைரசி என்ற முறையிலோ புதிதாக கேம்களை தினமும் வெளியிடுகிறார்கள். இவ்வாறு மட்டுமே, தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேம்கள் வெளியாகின்றனவாம்.

உலகிலேயே இம்மாதிரியான திருட்டுகள் நடப்பதில் இந்தியா மூன்றாமிடம் பெறுகிறது. ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் புது ஆபீஸ்!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot