போர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன?
இந்த சிறுமி இரவு நேரங்களில் இரகசியமாக சர்வைவல் சூட்டர் கேமை விளையாடி, அந்த கேம் ஸ்கீரினை விட்டு நகர விரும்பாமல் டாய்லெட் பயன்படுத்த கூட எழுந்து செல்லவில்லை.
ஒன்பது வயது சிறுமி ஒருவர் வீடியோ கேமிற்கு அடிமையாகி, எங்கேயும் நகராமல் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து, விளையாடுவதை தடுத்த தந்தையை தாக்கி தற்போது மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்களுக்கு மிகவும் பிடித்துப்போன போர்ட்நைட் கேம், கடந்த ஜூலையில் வெளியிட்ட பின்பு சுமார் 40மில்லியன் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுமி இரவு நேரங்களில் இரகசியமாக சர்வைவல் சூட்டர் கேமை விளையாடி, அந்த கேம் ஸ்கீரினை விட்டு நகர விரும்பாமல் டாய்லெட் பயன்படுத்த கூட எழுந்து செல்லவில்லை. தற்போது கேமிற்கு அடிமையானதில் இருந்து விடுபட தீவிர சிகிச்சையுடன் போரடி வரும் அந்த சிறுமி, ஒரு நாளைக்கு 10மணி நேரம் விளையாடியுள்ளார்.இரவெல்லாம் இதை விளையாடி விட்டு பள்ளியில் தூங்கி வழிவார்.

எக்ஸ் பாக்ஸ்
அவரின் தந்தை கேம் விளையாட உதவும் எக்ஸ் பாக்ஸ் கேமிங் கருவியை பறிக்க முயலும் போது, அச்சிறுமி அவரை தாக்கியுள்ளார்.இது பற்றி அவரின் தாயார் கூறுகையில் ,நாங்கள் அவளை அந்த கேமை விளையாட அனுமதித்த போது, அதற்கு அடிமையாகி அவளின் மனநிலையை பாதிக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என்கிறார்.

போர்ட்நைட்
எனது கணவர் இரவு நேரத்தில் அவள் விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு, சிறுநீரால் நனைந்த படுக்கையில் அமர்ந்து கேம் விளையாடிக்கொண்டிருப்பதை கண்டார். அந்த கேமுடன் மிகவும் ஒன்றிப் போய்விட்டதால் கழிப்பறைக்கு கூட அவள் செல்லவில்லை என்கிறார் அவரின் தாயார். அச்சிறுமிக்கு பெற்றோர் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ் பாக்ஸை வாங்கிக்கொடுத்தவுடன், போர்ட்நைட் கேமை பதிவிறக்கம் செய்துள்ளார்.

ஆசிரியர்
இரண்டு மாதங்களுக்கு பிறகு மதிப்பெண்கள் குறைவதாகவும், வகுப்புகளில் தூங்குவதாகவும் தலைமை ஆசிரியர் கூறிய பின்பு பெற்றோர் அவளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு கவலையடைந்தனர்.

கிரிடிட் கார்டுகள்
விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், ஜிம் மற்றும் இதர வகுப்புகளுக்கும், ஞாயிற்றுக்கிழமை சர்ச் செல்லாமல் சாக்குபோக்கு கூறத்துவங்கினார். மேலும் மாதம் 50டாலரை மைக்ரோசாப்ட்க்கு தங்களின் கிரிடிட் கார்டுகள் மூலம் செலுத்தியதையும் பெற்றோர் கவனித்தனர்.இந்த பணத்தின் மூலம் போர்ட்நைட் கேமின் செயல்திறனை அதிகரிக்கும் பல இன்-கேம் பர்சேசஸ்கள் செய்துள்ளார். மேலும் பெற்றோர் உறங்கியவுடன் நள்ளிரவில் எழுந்து காலை 5மணி வரை இந்த கேமை சிறுமி விளையாடியுள்ளார்.

மறுவாழ்வு
சிறுமியை இந்த கேமில் இருந்து காப்பாற்றும் கடைசி முயற்சியாக, இது போன்ற கேமிற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை நபரிடம் மறுவாழ்வு சிகிச்சை அளிக்க சம்மதம் பெற்றுள்ளனர். தற்போது அச்சிறுமி அதிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டு வருகிறார்.

தொழில்முறை
இது போன்ற வீடியோ கேமிற்கு அடிமையாகி பல குழந்தைகள் மனநல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக வல்லுநர்கள் பயப்படுகின்றனர். இந்த கேம்களை குழந்தைகள் பார்க்கும் வகையில் லைவ் செய்யும் தொழில்முறை கேமர்கள் மாதம் 5லட்சம் யூரோ வரை சம்பாதிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications