வீடியோ கேம் விளையாட்டுக்கான அருமையான கீபோர்டு!

By Karthikeyan
|
வீடியோ கேம் விளையாட்டுக்கான அருமையான கீபோர்டு!

தற்போது வீடியோ விளையாட்டுகளும் மற்றும் வீடியோ விளையாட்டு சாதனங்களும் சந்தைகளில் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. வீடியோ விளையாட்டு விளையாடும் போது சாதராண கீபோர்டுகள் நீண்ட நாள் உழைப்பதில்லை. ஏனெனி்ல் வீடியோ விளையாட்டை விளையாடுவோர் தங்களது கீபோர்டுகளை சற்று கடினமாக பயன்படுத்தவர். அதனால் சாதாரண கீபோர்டுகள் விரைவில் தம் வாழ்நாளை இழந்து விடுகின்றன.

எனவே வீடியோ விளையாட்டுகளுக்கென்றே தனியாக பயன்படுத்தக் கூடிய கீபோர்டுகளை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஜீனியஸ் நிறுவனம் தனது புதிய விளையாட்டுக்கான கீபோர்டை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த கீபோர்டுக்கு ஜீனியஸ் இம்பெரேட்டர் ப்ரோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கீபோர்ட் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு களையாக இருக்கிறது. இந்த கீபோர்டில் 3 படிநிலை கொண்ட ப்ரைட்நஸ் அட்ஜஸ்மென்ட் உள்ளது.

குறப்பாக ஆர்பிஜி மற்றும் ஆர்டிஜி விளையாட்டு பிரியர்களுக்காகவே வரும் இந்த கீபோர்டு 6 மேக்ரோ கீகளைக் கொண்டுள்ளது. இந்த கீகள் 18 மேக்ரோ கீகள் செய்யும் வேலைகளைச் செய்யும். அதுபோல் இந்த கீபோர்டில் வேலை செய்ய எளிதாக இருக்கும் விதத்தில் ஜீனயஸ் ஒரு மணிக்கட்டு பேடையும் வழங்குகிறது.

இந்த கீபோர்டு ஆன்போர்டு மெமரி கொண்டுள்ளது. அதனால் இதை பல கணினிகளில் இணைக்க முடியும். அதுபோல் இதில் வீடியோ மற்றும் வீடியோ ப்ளேபேக்குகளை விரைவாக இயக்கும் வசதியும் உண்டு.

மேலும் இந்த கீபோர்டு 1.8 மீட்டர் கேபிள் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவை கொண்டு வருகின்றன. இந்த கீபோர்டு ரூ.5450க்கு விற்கப்படுகிறது. வீடியோ விளையாட்டுகளுக்கு இந்த கீபோர்டைப் பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X