கேம்லாப்ட் வழங்கும் புதிய அதிரடி வீடியோ கேம்கள்

By Karthikeyan
|
கேம்லாப்ட் வழங்கும் புதிய அதிரடி வீடியோ கேம்கள்

கடந்த வியாழன் அன்று நன்றி நவிழும் விழா அமெரிக்கா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் உலகம் முழுவதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். எனவே இந்த விழாக்காலத்தை மனதில் கொண்டு கேம்லாப்டி நிறுவனம் புதிய வீடியோ கேம்களைக் களமிறக்கி இருக்கின்றன.

இந்த கேம்களையும் 0.99 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.55க்கு வாங்கலாம். மேலும் இந்த விழாக்காலத்தை மனதில் வைத்து இந்த கேம்களை குறைந்த விலைக்குக் களமிறக்குகிறது கேம்லாப்ட். இந்த கேம்களை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள், கணினிகள் ஆகியவற்றில் விளையாடலாம்.

இந்த 5 கேம்களும் அதிரடி சண்டைகள் நிறைந்தவை. குறிப்பாக இந்த புதிய கேம்கள் குழந்தைகளைக் கவரும் என்று நம்பலாம். அதாவது த அமேசிங் ஸ்பைடர் மேன் என்று வீடியோ கேம் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் அமேசிங் ஸ்பைடர் போன் என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு வருகிறது. இந்த கேமில் ஸ்பைடர்மேனுக்கும் லிசார்ட் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விவரிக்கிறது.

இரண்டாவதாக சிட்டி ஆப் செயின்ட்ஸ் என்ற கேமை கேம்லாப்ட் வழங்குகிறது. இந்த கேமின் மூலம் இதை விளையாடுபவர்கள் பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவை சுற்றி வரலாம்.

பேக்ஸ்டேப் என்ற கேமின் மூலம் இதை விளையாடுபவர்கள் அந்த கேமில் வரும் ஹென்றி ப்ளேக் என்பவரின் கதாபாத்திரத்தை செயல்படுத்துவார்கள். அதாவது இந்த கதாபாத்திரம் குதிக்கும், தவ்வும், மரம் ஏறும் மற்றும் காடு மலைகளையெல்லாம் சுற்றி வரும். இந்த கேமை விளையாடும் போது இந்த கதாபாத்திரம் பெறும் அனுபவங்களை இதை விளையாடுபவர்களும் பெறமுடியும்.

நான்காவதாக தி அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் என்ற கேம் வருகிறது. இந்த கேம் விளையாடுவதன் மூலம் புதையைலைத் தேடும் அனுபவம் மற்றும் வீரதீர செயல்களைச் செய்த அனுபவம் ஆகியவை கிடைக்கும்.

இறுதியாக டாம் க்ளேன்சி ரெய்ன்போபோ என்ற கேமையும் கேம்லாப்ட் வழங்குகிறது. இந்த கேம் படைவீரர்களின் பணிகளை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X