ஆன்ட்ராய்டு சாதனங்களில் ஸ்பைடர்மேனின் ஜாலங்கள்!

Posted By: Karthikeyan

 

ஆன்ட்ராய்டு சாதனங்களில் ஸ்பைடர்மேனின் ஜாலங்கள்!

பல சூப்பரான வீடியோ விளையாட்டுகளைக் களமிறக்கி இருக்கும் கேம்லாப்ட் நிறுவனம் தற்போது ஸ்பைடர்மேன் என்ற திரைப்பட வடிவத்தில் வரும் புதிய வீடியோ கேமை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுக்காக அறிமுகம் செய்ய இருக்கிறது.

சமீபத்தில் இந்த விளையாட்டின் முன்னோட்டமாக சில ட்ரைலர் காட்சிகளை வெளியிட்டிருக்கிறது. அதன் படி ஒரு சாதாரண சிறுவனம் தனது பள்ளியில் எட்டுக்கால் பூச்சியால் கடிபடுகிறான. அதன் மூலம் இரண்டு மடங்கு இமாலய சக்தி அவனுக்குக் கிடைக்கிறது. அந்த சக்தியை தனது தேவைகளுக்கும் விரும்பங்களுக்கும் மட்டுமே முதலில் பயன்படுத்துகிறான்.

ஆனால் அவனுடைய மாமா அவனது சக்திகளை அவனிடமிருந்து பறித்து தீய காரியங்களுக்காக பயன்படுத்துவதை உணர்ந்த அவன், தனக்கு கிடைத்திருக்கிற அபூர்வ சக்தியைப் பயன்படுத்தி எவ்வாறு இந்த உலகத்தில் உள்ளத் தீமைகளைக் களைய முற்படுகிறான் என்பதே இந்த விளையாட்டின் கதையாக இருக்கிறது.

ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களை வைத்திருப்போர் நாளை மறுதினம் முதல் இந்த விளையாட்டை தங்களது சாதனங்களில் டவுன்லோட் செய்து பெறலாம். இதற்கான கட்டண விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கண்டிப்பாக இந்த ஸ்பைடர்மேன் விளையாட்டு ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களை வைத்திருப்போருக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் ஐமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot