'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?

  போர்ட்நைட் கேம் தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கேமாக இருக்கிறது மற்றும் எப்போதும் இருக்கப் போகிறது. உலகம் முழுவதும் 10மில்லியன் பேர் இதை விளையாடுகின்றனர் மற்றும் அனைத்து கேமிங் தளங்களிலும் இது விரிவதை பார்க்கும் போது, இன்னும் அதீத வளர்ச்சியடையவுள்ளது. இந்த போர்ட்நைட் மொபைல் கேம் ஆண்ராய்டிலும் வரப்போகிறது. ஆனால் எப்போது? எப்படி இருக்கப்போகிறது? எப்படி செயல்பட வேண்டும்? வாங்க விரிவாக பார்க்கலாம்.

  'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?

  போர்ட்நைட் என்றால் என்ன?
  போர்ட்நைட் : பேட்டில் ராயல் என்பது மூன்றாம் நபர் சூடும் போர் விளையாட்டு. இதை இலவசமாக விளையாடலாம். இங்கு உங்களின் கதாபாத்திரத்திற்கு தேவையான உடைகளையும் தோலையும் மட்டுமே வாங்கவேண்டும். ஆனால் இதில் வெற்றியை விலை கொடுத்து வாங்கமுடியாது.

  இந்த கேமில் 100 ஆயுதமில்லா வீரர்கள் வரை ஒன்றுசேர்த்து, ஏதாவது ஒரு ஆயுதத்துடன் மேப் மீது விடப்படுவர். அங்கிருந்து பாழடைந்த கட்டிடங்களை தேடி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்களுக்கான உறைவிடம் மற்றும் கோபுரங்களை கட்ட வேண்டும். இவையனைத்தையும் அடிக்கும் சுழல் காற்றிற்கு இடையே செய்யவேண்டும். இதுபோலவே மேப்பின் ஒவ்வொரு பகுதியாக செல்ல வேண்டும். இந்த கேமில் விளையாடுபவரின் குறிக்கோளே "உயிரோடு இருக்க வேண்டும், அதற்காக பிறரை கொல்ல வேண்டும்".

  ஏன் இது மிகவும் பிரபலம்?
  போர்ட்நைட் கேம் இலவசமாக விளையாடலாம். மேலும் இதை விளையாட விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட வெர்சன்களும் உள்ளன. சேவ் தி வோர்ல்டு மற்றும் ப்ளேயர் அன்னோன் பேட்டில்கிரவுண்ட் . இந்த கேம் பிரபலமடைய இன்னொரு காரணம் இதை லைவ் ஸ்ட்ரீம் செய்யும் டிவிச்(Twitch) என்னும் தளம். இந்த தளத்தின் மூலம் இந்த கேம் பிரபலமடைந்து தினமும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடுகின்றனர்.

  'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?


  ஏன் இந்த கேம் இலவசம்?
  மற்ற மல்டி ப்ளேயர் கேமை போலவே இதுவும் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் இதில் விளையாடுபவர் வாங்கும் காஸ்மடிக் பொருட்கள், எமோடிஸ், டேன்ஸ் மூவ்ஸ் மற்றும் சைகைகள் போன்றவற்றை வாங்கும் போது அவர்களுக்கு பணம் கிடைக்கிறது.

  ஏன் ஆண்ட்ராய்டு போனில் இந்த கேம் இல்லை?
  உலகிலேயே ஆண்ட்ராய்டு தான் மிகப்பெரிய கேமிங் தளம். விரைவில் இதில்
  போர்ட்நைட் கேமை வெளியிட திட்டமிட்டுள்ளதாக எபிக் கேம்ஸ் கூறியுள்ளது. ஆனால் ஐ ஓ.எஸ் ல் ஏற்கனவே இந்த கேம் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ராய்டு வெளியிடும் போது பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

  ஏனெனில், இதில் விளையாடுபவர்களுக்கு தெரியும் இந்த கேம் தற்போது நிலையாக இல்லை என்று. நிறைய தவறுகள் உள்ளன. அதே சமயம் சர்வரும் செயலிழந்து விடுகிறது. எனவே ஆண்ராய்டில் இதை வெளியிடுவது கடினமே.


  ஆனாலும் ஐ ஓ.எஸ் ல் இந்த கேம் வெற்றிக்கொடி நாட்டிவிட்டது.ஐ ஓ.எஸ் பயனர்களிடமிருந்து மட்டும் தினமும் 2 மில்லியன் டாலர் பணம் சம்பாதிக்கிறது.

  சேல் தி வேர்ல்டு வெர்சன் அதிக மெமரி மற்றும் சி.பி.யூ திறனை எடுத்துக்கொள்வதால் அதை மொபைலில் கொண்டு வருவது மிகவும் கடினம் என்கிறது எபிக் கேம்ஸ் நிறுவனம்.

  எப்போது போர்ட்நைட் கேம் ஆண்ராய்டில் வெளியாகும்?
  மாரச் மாத துவக்கத்தில் எபிக் கேம்ஸ் நிறுவனம் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் போர்ட்நைட் ஆண்ட்ராய்டில் வெளியாகும் என கூறியிருந்தது. அப்படியென்றால் மே அல்லது ஜூன் ஜூலை மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. வெயியாகும் முன்பு உலகம் முழுவதும் பீட்டா சோதனை செய்யப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

  'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?

  எந்தெந்த போனில் விளையாட முடியும்?
  ஐபோன்களில், 6எஸ் முதல் இதை விளையாடலாம். ஐ போன் எஸ்.ஈ யில் கூட விளையாடமுடியும். ஆனால் ஐ ஓ.எஸ்11 மற்றும் குறைந்தபட்சம் 2GB ரேம் தேவை.

  ஆண்ராய்டு போன்களில், ஓரியோ இயங்குதளமும் 2GB ரேமும் குறைந்தபட்சம் தேவைப்படும். Samsung Galaxy S9 மற்றும்Sony Xperia XZ2ல் ஸ்னாப்டிரோகன் 845 SoC இருப்பதால் சிறந்த கேமிங் அனுபவத்தை பெற முடியும். இனி வெளியாகவுள்ள l the HTC U12, LG G7 ThinQ மற்றும் OnePlus 6 மொபைல்களிலும் ஸ்னாப்டிரோகன் 845 SoC இருப்பதால் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும்.

  English summary
  Fortnite Mobile why is it so popular and when is it coming to Android; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more