Home
Gaming

பி.யூ.பி.ஜி மொபைல் கேமை விட 4 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய ஃபோர்ட்நைட்.!

காஸ்மடிக் ஐடங்களை தவிர இந்த இரு கேம்களும் பல்வேறு பணம் வசூலிக்கும் மாடல்களையும் வழங்குகின்றன.

By Vivek Sivanandam

ஐ.ஓஸ் ஃபோர்ட்நைட் கேமனின் வருவாய் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பி.யூ.பி.ஜி மொபைல் கேமை ஒப்படும் போது இந்த பிரபல பேட்டில் ராயல் சூட்டர் கேம், தனது இன்-கேம் பர்சேஸ் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இத்தணைக்கும் பி.யூ.பி.ஜி மொபைல் கேம் ஆண்ராய்டு மற்றும் ஐ.ஓஎஸ் தளங்களில் வெளியான நிலையில் ஃபோர்ட்நைட் ஆண்ட்ராய்டில் இன்னும் வெளியாகவில்லை.

பி.யூ.பி.ஜி மொபைல் கேமை விட 4 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய ஃபோர்ட்நைட்.!

ஆய்வு நிறுவனமான சென்சார் டவரின் தரவுகளின் படி, பி.யூ.பி.ஜி மொபைல் கேம் ஆண்ராய்டு மற்றும் ஐ.ஓஎஸ் தளங்களில் நடைபெற்ற இன்-கேம் மைக்ரோ பரிவர்த்தனைகளின் படி, முதல் வாரத்தில் மட்டும் 1 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதே கால அளவில், அதே நாடுகளில் ஐ.ஓஸ்-ல் மட்டும்வெளியான ஃபோர்ட்நைட் 3.7மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.

பி.யூ.பி.ஜி மொபைல் கேமின் பெரும்பாலான வருவாய் அமெரிக்க ப்ளேயர்களிடம் இருந்து வந்துள்ளது. அமெரிக்கா 48%, தாய்லாந்து 7%,பிரிட்டன் 5%, கனடா 4% மற்றும் ரஷ்யா 3% வருவாய் அளித்துள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் கூறியுள்ளது.

பி.யூ.பி.ஜி மொபைல் கேம், ப்ளேஸ்டோர் மூலம் கடந்தவாரம் முதல் கட்டணம் வசூலிக்கத் துவங்கும் போதே, சீனாவிற்கு வெளியில் மட்டும் 22மில்லியன் ஐ.ஓஎஸ் ப்ளேயர்கள் இதை இன்ஸ்டால் செய்திருந்தனர். இதை ஒப்பிடும் போது, முதல் ஏழு நாட்களில் ஃபோர்ட்நைட் 3.7மில்லியன் டவுன்லோடுகள் மட்டுமே செய்யப்பட்டன. குறைந்த அடித்தளமே இருந்தாலும் அதிக வருமானம் ஈட்டியுள்ளது.


காஸ்மடிக் ஐடங்களை தவிர இந்த இரு கேம்களும் பல்வேறு பணம் வசூலிக்கும் மாடல்களையும் வழங்குகின்றன. ஆனால் ஃபோர்ட்நைட்ல் வாங்குபவற்றை மற்ற தளங்களுக்கு எடுத்துசெல்ல ஏதுவாக ப்ளேயர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பி.யூ.பி.ஜி மொபைல் கேமை விட 4 மடங்கு அதிக வருவாய் ஈட்டிய ஃபோர்ட்நைட்.!

இந்த வார துவக்கத்தில் ஃபோர்ட்நைட் சீசன் 4 ஐ ஓ.எஸ்-ல் துவங்கியது. அந்த செயலியின் அளவு ஐ.ஓஎஸ்-ல் 209.6MB மற்றும் பி.சி, பி.எஸ்4 , எக்ஸ் பாக்ஸ் ஒன் போன்றவற்றில் அளவு இதை விட பெரியதாக இருக்கும். ஃபோர்ட்நைட் சீசன் 4ல் மேப்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே உள்ள பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இன்னும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று, குறைந்த செயல்திறனுள்ள மொபல்களில் பின்புலங்களை டைனமிக்காக பயனர்களுக்கு தகுந்தாற் போல மாற்றுவது ஆகும். ஐபாட் ஏர்2 மற்றும் ஐபோன் 6எஸ் போன்றவற்றில் இந்த அதிகரிப்பட்ட செயல்திறன் பரிசோதிக்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Best Mobiles in India

English summary
Fortnite iOS Revenue 3.7 Times PUBG Mobile on iOS and Android Combined ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X