இஎ ஸ்போர்ட்ஸ் களமிறக்கும் பிபா சாசர் 13

Posted By: Karthikeyan
இஎ ஸ்போர்ட்ஸ் களமிறக்கும் பிபா சாசர் 13

உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கால்பந்து விளையாட்டு ஏனோ அமெரிக்காவில் மட்டும் அவ்வளவு பிரபலமாகவில்லை. ஆனால் அமெரிக்காவிலும் கால்பந்து விளையாட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இஎ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிபா சாசர் 13 என்ற வீடியோ கேமை வட அமெரிக்காவில் இந்த வாரம் களமிறக்க இருக்கிறது.

இதுவரை 1 மில்லியன் கேம்கள் உலக அளவில் ப்ரீ ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் 4.6 மில்லியன் ரசிகர்கள் பிஎஸ்3, எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் கணினிகளில் இந்த மாதிரி பிபா சாசர் 13 கேம்களை விளையாடி இருப்பதாகவும் இஎ தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை 42 சதவீதம் இந்த வருடத்தில் மட்டும் அதிகரித்திருப்பதாகவும் இஎ தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் 194,000 ரசிகர்கள் இந்த பிபா சாசர் 13 மாதிரி கேம்களை விளையாடி பார்த்திருக்கின்றனர். எந்த பிபா சாசர் 13 கேமை பிஎஸ்3, எக்ஸ்பாக்ஸ் 360, ப்ளேஸ்டேசன் விடா போர்ட்டபுள், நிண்டின்டோ வி, கணினி, பிஎஸ்2, நிண்டின்டோ 3டிஎஸ் மற்றும் பிஎஸ்பி போன்ற வீடியோ கேம் சாதனங்களில் விளையாடலாம். மேலும் ஐபோன் மற்றும் ஐபேடிலும் இந்த கேமை விளையாட முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot