Home
Gaming

சீன சந்தையைக் கலக்கும் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்!

By Karthikeyan
 சீன சந்தையைக் கலக்கும் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்!

சமீபத்தில் சீன கணினி சந்தையில் ஒரு புதுமையான வீடியோ விளையாட்டு சாதனம் களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்திற்கு ட்ராய்டுஎக்ஸ்360 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் பார்ப்பதற்கு சோனியின் பிஎஸ் விஸ்டா விளையாட்டுச் சாதனத்தைப் போல் இருக்கிறது. இந்த விளையாட்டு சாதனத்தின் முக்கிய சிறப்பு இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகிறது.

தற்போது சீன சந்தையில் விற்கப்பட்டாலும் விரைவில் உலக சந்தைக்கு வந்துவிடும் என்று கருதப்படுகிறது. இந்த விளையாட்டு சாதனம் 9 வேறுபட்ட எமுலேட்டர்களைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மிக உறுதியாகவும் இருக்கிறது.

இந்த விளையாட்டு சாதனம் ஏராளமான விளையாட்டுகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக சேகா மெகா ட்ரைவ், ஒரிஜினல் ப்ளேஸ்டேசன், நிண்டின்டோ 64, கேம் பாய் கலர், என்இஎஸ், எஸ்என்இஎஸ், கேம் பாய் அட்வான்ஸ் மற்றும் சேகா கேம் கியர் போன்றவற்றை இந்த சாதனம் சப்போர்ட் செய்கிறது.

இந்த சாதனம் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் இது மிக வேகமாக இயங்கும் சக்தி கொண்டது. மேலும் 32ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய அளவிற்கு 8ஜிபி சேமிப்பை இந்த சாதனம் வைத்திருக்கிறது. இதன் 5 இன்ச் தொடுதிரை மூலம் இதில் மிக சூப்பராக விளையாட்டுகளை விளையாடலாம்.

மேலும் இந்த சாதனம் எச்டிஎம்ஐ கொண்டிருப்பதால் இதை பெரிய திரையிலும் இணைக்க முடியும். மினி யுஎஸ்பி போர்ட்டை இந்த சாதனம் கொண்டிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றமும் செய்ய முடியும். இந்த சாதனத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதன் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.

இதன் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் 0.3எம்பி முகப்பு கேமரா இந்த சாதனத்திற்கு மெருகேற்றுகின்றன. இதன் பேட்டரியும் இதற்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X