தீவாளிக்கு டிஷ்னியுடிவி வழங்கும் இலவச கேமிங் அப்ளிகேசன்கள்

டிஷ்னியுடிவி நிறுவனத்தின் கேமிங் துறையான இன்டியாகேம்ஸ் இந்த தீவாளிக்கு ஒரு இலவச பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது தனது பிரபலமான 8 கேமிங் அப்ளிகேசன்களை இந்த தீவாளி திருவிழாவை முன்னிட்டு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. ஆப்பிளின் ஐபோன், ஐபோட் டச் மற்றும் ஐபேடுகளைப் பயன்படுத்துவோர் இந்த கேமிங் அப்ளிகேசன்களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் அவர்கள் இந்த அப்ளிகேசன்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த கேமிங் அப்ளிகேசன்கள், உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம், ஐபிஎஸ் கிரிக்கெட் ஜூரம், கிரிக்கெட் டி20 ஜூரம் மற்றும் குவாரல் போன்ற கேம்களை உள்ளடக்கி இருக்கின்றன. இந்த அப்ளிகேசன்களை நவம்பர் 10 முதல் நவம்பரி 17க்குள் ஆப்பிள் ஐபோன், ஐபோட் டச் மற்றும் ஐபேடுகளைப் பயன்படுத்துவோர் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரு கேமை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆனால் இந்த வாய்ப்பைத் தவற விடுபவர்களுக்கு இந்த மாதத்தில் உள்ள வெள்ளிகிழமைகளில் மட்டும் இந்த கேம்களை குறைந்த விலைக்கு வழங்குகிறது டிஷ்னியுடிவி.
நவம்பர் 10ல் உலக கோப்பை கிரிக்கெட் பீவர் டீலக்ஸ், 11ல் ஐபிஎல் டி20 பீவர் டீலக்ஸ், 12ல் கிரிக்கெட் வேர்ல்டுகப் பீவர் டீலக்ஸ், 13ல் ஐபிஎல் கிரிக்கெட் பீவர் டீலக்ஸ், 14ல் குவாரல் டீலக்ஸ், 15ல் காட்சில்லா மான்ஸ்டர் மேகம், 16ல் கிரிக்கெட் டி20 பீவர் மற்றும் 17ல் ஆஸ்திரேலேயா விஎஸ் இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ் டூலக்ஸ் ஆகிய கேம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications