Home
Gaming

கேம் பிரியர்களுக்காக புதிய கேம் கீபோர்டு மற்றும் மவுஸ்!

By Karthikeyan
கேம் பிரியர்களுக்காக புதிய கேம் கீபோர்டு மற்றும் மவுஸ்!
சைபர் ஸ்னிபா சமீபத்தில் ஒரு புதிய நவீன கேமிங் கீபோர்டையும் மற்றும் ஒரு கேமிங் மவுசையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கேமிங் கீபோர்டுக்கு கேம் பேட் வி2 என்றும் கேமிங் மவுசிற்கு சிலின்செர் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய கேமிங் கீபோர்டு மற்றும் கேமிங் மவுஸ் கேம் பிரியர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். இந்த புதிய கேமிங் கீபோர்டு சாதாரண கீபோர்டைப் போல தோன்றும். ஆனால் இதை சாதாரண கீபோர்டைப் போல பயன்படுத்த முடியாது.

ஏனெனில் இதில் விளையாடுவதற்குத் தேவையான பட்டன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோல் எண் தளமும் இருக்கும். மேலும் நாவிகேசன் கீகள் மற்றும் கட்டுப்பாட்டு பட்டன்கள் இந்த கீபோர்டில் இருக்கும். இதன் கீகள் கருப்பு மற்றும் க்ரே நிறங்களில் வருகின்றன. இந்த கீபோர்டில் மிக அகலமான தொடுதளம் உள்ளதால் இந்த கீபோர்டில் மிக அழகாக வேலை செய்ய முடியும்.

கேம்களின் இயக்கத்திற்குத் தகுந்தவாறு இந்த கீபோர்டில் உள்ள கீகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். மேலும் வலது கை மற்றும் இடது கை பழக்கமுள்ளவர்கள் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த கீபோர்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக சிலின்செர் கேமிங் மவுசை எடுத்துக் கொண்டால் இது பக்காவான ஸ்டைலில் வருகிறது. குறிப்பாக வீடியோகேம் விளையாடுவதற்கு இந்த மவுஸ் மிகவும் அற்புதமாக இருக்கும். 63 கட்டுப்பாட்டு கட்டளைகளை இந்த மவுசில் சேமித்து வைக்க முடியும்.

மேலும் இந்த மவுசில் 7 வகையான் கேமிங் ப்ரபைல்கள் உள்ளன. ஒவ்வொரு ப்ரபைலும் ஒவ்வொரு எல்இடி லைட் வண்ணத்தில் வருகிறது. மொத்தம் இந்த மவுசில் 9 கஸ்டமைசபுள் பட்டன்கள் உள்ளன. இதன் டிபிஐ ரேன்ச் 100லிருந்து 5000க்குள் உள்ளது. இந்த கேமிங் கீபோர்டு மற்றும் கேமிங் மவுஸ் ஆகியவற்றில் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X