அசத்த வரும் வயர்லெஸ் வீடியோ கேம் பேட்!

Posted By: Karthikeyan
அசத்த வரும் வயர்லெஸ் வீடியோ கேம் பேட்!

சைட்கோ நிறுவனம் சமீபத்தில் கேமிங்கிற்காக ஒரு ஆல் இன் ஒன் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமிங் சாதனத்தில் கேம் பேட், ஒரு மவுஸ் மற்றும் ஒரு முழுமையான கீபோர்டு ஆகியவை இருக்கும். இந்த சாதனத்திற்கு சைட்கோ ஏர் கான்குவரர் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சைட்கோவின் பழைய கேமிங் சாதனம் கீபோர் மட்டும் மவுஸ் கண்ட்ரோலர் மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இப்போது கேம் பேடும் சேர்ந்து வருவதால் இதைக் கொண்டு அட்டகாசமாக விளையாடலாம். மேலும் இந்த சாதனத்தை ப்ளேஸ்டேசன் அல்லது கணினி ஆகியவற்றி மிக எளிமையாக இணைக்க முடியும்.

இந்த ஆல் இன் ஒன் கேமிங் சாதனம் அட்டகாசமான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 4 ப்ரோக்ராம் பட்டன்கள், ஒரு முழுமையான க்யுவெர்ட்டி கீபோர்டு, கேம்பேட், ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் ஐயன் பேட்டரி, 20 மணி நேர இயங்கு நேரம், 10 மீ அளவு இணைக்கும் வசதி, மற்றும் ப்ளேஸ்டேசன் விண்டோஸ் 98-7 இயங்கு தளங்களில் இயங்கும் கணினிகளில் இணைக்கக்கூடிய தன்மை போன்ற சிறப்புகளை இந்த கேமிங் சாதனம் கொண்டிருக்கிறது.

இந்த கேமிங் சாதனம் அட்டாகாசமான டிசைனுடன், அடக்கமாக குறைந்த எடையில் வருகிறது. இதன் கீபோர்டு மற்றும் கேம்பேடு பட்டன்கள் மிகவும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கின்றன. அதனால் இதில் கேம் விளையாடுவது மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த கேமிங் சாதனம் கருப்பு மற்றும் க்ரே வண்ணங்களில் வருகிறது. இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும். அதாவது இதன் யுஎஸ்பி டோங்கிள் மூலம் ப்ளேஸ்டேசன் அல்லது கணினியில் இந்த கேமிங் சாதனத்தை இணைக்க வேண்டும். இணைத்தவுடன் இதன் சாப்ட்வேர் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும். பின் விளையாட தொடங்கலாம்.

இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் தொடர்ந்து விளையாடலாம். அதோடு இதன் யுஎஸ்பி மூலம் இதன் பேட்டரி தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இந்த சைட்கோ கேமிங் சாதனத்தின் விலை ரூ.5000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்