Home
Gaming

தள்ளுபடி விலையில் ப்ளே ஸ்டேசன்-3!

By Karthikeyan
தள்ளுபடி விலையில் ப்ளே ஸ்டேசன்-3!

ப்ளேஸ்டேசன் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு பின் 2006ல் ப்ளேஸ்டேசன் 3 வந்த பின் கேமிங் உலகில் பெரிய புயலை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்த ப்ளேஸ்டேசன் 3 விற்பனையில் பல சாதனைகளை முறியடித்தது. குறிப்பாக இந்த சாதனம் மிகவும் அழகாக அதே நேரத்தில் வீடியோகேம் பிரியர்களின் தேவைகளை மிகச் சரியாக பூர்த்தி செய்ததால் இந்த ப்ளேஸ்டேசன் 3 மக்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இன்னும் இந்த ப்ளேஸ்டேசன் 3க்கு அதிகமாக வரவேற்பு உண்டு. குறிப்பாக இந்த சாதனம் ஆன்லைன் மூலம் அதிக அளவில் விற்பனையாகிறது.

இப்போது இந்த ப்ளேஸ்டேசன் 3க்கு பல ஆன்லைன் வர்த்தகர்கள் தள்ளுபடி விலையை அளிக்கின்றனர். அதனால் இந்த சாதனத்தை குறைந்த விலைக்கு வாங்க முடியும். குறிப்பாக சில்லறை வர்த்தகரிடம் இந்த சாதனத்தை வாங்குவதை விட ஆன்லைனில் வாங்கினால் இதன் விலை இன்னும் குறைவாக இருக்கும்.

இந்த ப்ளேஸ்டேசன் 3ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது ப்ளூ-ரே ட்ரைவ்கள், ஆன்லைன் விளையாட்டு சேவை மற்றும் ப்ளேஸ்டேசன் போர்ட்டபுள் இணைப்பு போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் உருவம் மற்றும் டிசைன் ஆகியவை ப்ளேஸ்டசன் 2வை ஒத்திருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் முந்தைய ப்ளேஸ்டசன்களைவிட இது மிகவும் அடக்கமாக மற்றும் கையாள்வதற்கு மிக எளிதான சாதனமாகும். இதன் இயங்குதளம் எக்ஸ்ரோஸ் மீடியாபாரினால் தயாரிக்கப்பட்டு அது சாப்ட்வேர் 3.61 வெர்சனைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஹார்ட்வேர் சட்டா வகையைச் சேர்ந்தது ஆகும்.

இந்த ப்ளேஸ்டசனின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழாக் காலங்கள் மற்றும் முக்கிய தருணங்களில் இது குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக பலர் இந்த ப்ளேஸ்டேசனை பரிசுப் பொருளாகவும் பிறருக்கு வழங்குகின்றனர். இந்த ப்ளேஸ்டசன் 3 இந்தியாவில் ரூ.15000க்கு கிடைக்கும் என தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X