ஸ்மார்ட்போனுக்கான புதிய ப்ளூடூத் கேம்பேட்!

Posted By: Karthikeyan
ஸ்மார்ட்போனுக்கான புதிய ப்ளூடூத் கேம்பேட்!

மொபைல்களில் பிஜிபி ப்ளூடூத் கேம்பேட் வந்த பிறகு மொபைல்கள் ஒரு விளையாட்டுச் சாதனமாகவே மாறிவிட்டது. மேலும் இதில் விளையாடுவதும் மிக எளிதாக இருக்கும். இது ஒரு4 வழி விளையாட்டு பேட் ஆகும். இதன் மூலம் விளையாட்டை கட்டுப்படுத்த முடியும். இந்த பிஜிபி100 ப்ளூடூத் விளையாட்டு பேடின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது ரப்பர் கொண்டு வருகிறது. அதனால் மொபைலின் பக்கங்களில் இவற்றைப் பொருத்த முடியும்.

இந்த ரப்பர் பேட் விளையாட்டின் போது நகர்த்துவதற்கு எளிதாக இருக்கிறது.

இதன் எடை 130.2 கிராம்கள் மட்டுமே. மேலும் இதைப் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும்.

ப்ளூடூத் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் அதாவது பாக்கட்பிசி சாதனங்கள், விண்டோஸ் மொபைல்கள் மற்றும் சிம்பியன் யுஐக்யூ போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.

இந்த பிஜிபி 100 ப்ளூடூத் கேம்பேடின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது பைகலர் எல்இடி, ஒரு 1.5 எஎஎ பேட்டரி, 6 கஸ்டமைஸ் கீகள் மற்றும் இயக்கு பட்டன் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதை மிக எளிதாகவும் மடக்கி வைக்க முடியும். அதுபோல் 4 வழி கண்ட்ரோல் பேடும் உள்ளது.

இதில் உள்ள பேட்டரி 3.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த பிஜிபி பாக்கட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்காவே தயாரிக்கப்படுகிறது.

இந்த பிஜிபி கேம்பேடை வாங்கும் போது சிடி ரோம், பேட்டரி மற்றும் 2 பக்கத்திலான மேனுவல் ஆகியவைக் கொடுக்கப்படும். இந்த கேம்பேடின் விலை ரூ.4,400 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot