குறைந்த ஸ்டோரேஜ், பெஸ்ட் கேமிங் ஆப்ஸ் வேணுமா? அப்ப இதை படியுங்க....
குறைவான மெமரியில் நல்ல கேம் ஆப்ஸ் வேணுமா?
தற்போது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் கூட மிகச்சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது. ஆனால் அதே நேரத்தில் நாம் நினைத்ததை டவுன்லோடு செய்யும் அளவுக்கு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் போதுமான இடம் இருப்பதில்லை.

குறிப்பாக கேம்ஸ் ஆப்ஸ்கள் அதிகளவு போனில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து கொள்வதால் முக்கிய சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யும்போது இடமில்லாமல் திண்டாடும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அதே நேரத்தில் கேம்ஸ் ஆப்ஸ்களை டெலிட் செய்யவும் மனம் வராது. இந்த நிலையில் குறைந்த இடத்தை மட்டுமே அடைக்கும் வகையில் சிறந்த கேம்ஸ் ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கின்றது. அவற்றில் ஐந்து முக்கிய கேம்ஸ் ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்

பிக்சல் டங்ஜியான்( Pixel Dungeon)
இந்த கேமில் கிராபிக்ஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் நம்முடைய போனில் மிகக்குறைந்த இடத்தை மட்டுமே எடுத்து கொள்கிறது. அதாவது இதற்கு தேவை வெறும் 2.84 MB மட்டுமே. மேலும் இந்த கேமை டவுன்லோடு செய்ய கூடுதலாக எந்த பெர்மிஷனும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு. இது ஒரு ரோக்லைக் கேம்.
இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

ஹாப்லைட் (HopLite)
இந்த கேமும் குறைந்த கிராபிக்ஸ் தன்மைகளை கொண்டு, குறைந்த அளவே மெமரியை எடுத்து கொள்ளும் ஒரு விருப்பத்திற்குரிய கேம் ஆப்ஸ். நாம் இந்த கேமை விளையாடும் உரிமையை விலைக்கு வாங்கி எந்த டிவைசில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் வெறும் 5.5MB அளவுள்ள மெமரியை மட்டுமே எடுத்து கொள்ளும் இந்த கேம் ஆப், எளிமையான அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு கேம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

லீக் ஆஃப் ஈவில் ஃப்ரி (Leage of Evil Free)
உலகம் முழுவதும் உள்ள லொகேஷனில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆக்சன் கேம் இது. இந்த கேமை டவுன்லோடு செய்ய நமக்கு 16.8 MB அளவு மெமரி இருந்தால் போதும். இந்த கேமில் 160 லெவல்கள் இருப்பதால் ஓய்வு நேரத்தை கழிக்க பயன்படும் கேம்ஸ்களில் ஒன்று.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த கேமை நாம் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த கேம் மிகவும் பிடித்திருந்தால் இதன் பிரிமியர் வெர்ஷனை விலைக்கு வாங்கி கொள்ளும் வசதியும் உண்டு
இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

ஜைரோ (Gyro)
ஆச்சரியத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேமில் அற்புதமான கிராபிக்ஸ் வேலைகள் உள்ளன. இது ஒரு பஸில் கேம்.
ஆன்லைனில் விளையாடும் வகையில் உள்ள இந்த கேம் அறிவுக்கு வேலை கொடுக்கும் வகையில் உள்ளது. டிசைனில் எளிமையாக உள்ள இந்த ஜைரோ கேமை டவுன்லோடு செய்ய 3.36 MB நமது மொபைலில் இடம் இருந்தால் போதுமானது.
இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

இன்ஃபெக்டோனேட்டர் (Infectonator)
இந்த கேமை டவுண்லோடு செய்ய நமக்கு தேவையான மெமரி 56.7 MB. மேலே பார்த்த கேம்ஸ்களின் மெமரியை விட இதற்கு கொஞ்சம் அதிக மெமரி தேவைப்பட்டாலும் இதில் கிடைக்கும் அனுபவமே தனிதான். ஒரு நகரத்திற்குள் நுழையும் காட்டேரிகளை ஒழிக்க வேண்டும் என்பது தான் இந்த கேமின் கான்செப்ட்.


Click it and Unblock the Notifications