வந்துவிட்டது பென்க்யூ வழங்கும் புதிய வீடியோ கேம் மானிட்டர்!

Posted By: Karthikeyan
வந்துவிட்டது பென்க்யூ வழங்கும் புதிய வீடியோ கேம் மானிட்டர்!

பென்க்யு சமீபத்தில் இரண்டு கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமிங் மானிட்டர்களுக்கு எக்ஸ்எல்2420டி மற்றும் எக்ஸ்எல்2420டிஎக்ஸ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த மானிட்டர்கள் 120 ஹெர்ட்ஸ் ட்ரிக்கர், 12எம்:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேசியோ மற்றும் 2 எம்எஸ் ஜிடிடி ரெஸ்பான்ஸ் நேரம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன.

இந்த 2 எக்ஸ்எல் வரிசை மானிட்டர்கள் எப்பிஎஸ் கேம்களை சப்போர்ட் செய்கின்றன. மேலும் இந்த மானிட்டர்கள் நவீன வண்ண தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மானிட்டர்கள் மிகவும் ப்ரைட்டாக உள்ளன. அதோடு இதில் ப்ளாக் ஈக்வலைசர் தொழில் நுட்பம் உள்ளதால் ஒளி குறைந்த இடங்களிலும் மிகவும் வெளிச்சமாக உள்ளன.

அடுத்ததாக இந்த மானிட்டர்கள் ஒரு ரிமோட் கண்ட்ரோலர் கொண்டு வருவதால் இதன் டிஸ்ப்ளே செட்டிங்குகளை மிக வேகமாக இயக்க முடியும்.

மேலும் கேம்களுக்கு ஏற்ப திரையின் அளவை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியும் இந்த மானிட்டர்களில் உண்டு. இந்த திரையின் அளவு 17 இன்ச் முதல் 24 இன்ச்சுக்குள் இருக்கும்.

இந்த எக்ஸ்எல்2420டி கேமிங் மானிட்டர் என்விடியா 3டி லைட் பூஸ்ட் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த மானிட்டர்களின் வெளிச்சம் இரு மடங்காக உள்ளன.

அடுத்ததாக எக்ஸ்எல்2420டிஎக்ஸ் மானிட்டர் 3டி ஐஆர் எமிட்டர் மற்றும் என்விடியா 3டி விஷன் 2 க்ளாஸ் கிட்டைக் கொண்டுள்ளது. அதனால் இந்த மானிட்டரில் 3டி வசதியை மிக அருமையாக அனுபவிக்க முடியும்.

இந்த கேமிங் மானிட்டர்களின் விலை ரூ.22000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot