உபிசாப்ட் களமிறக்கியிருக்கும் புதிய ஆசாஸின் கிரீட் III வீடியோ கேம்

Posted By: Karthikeyan
உபிசாப்ட் களமிறக்கியிருக்கும் புதிய ஆசாஸின் கிரீட் III வீடியோ கேம்

உபிசாப்ட் நிறுவனம் தனது புதிய வீடியோ கேம் விளையாட்டை நேற்று இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. ஆசாஸின் கிரீட் III என்று அழைக்கப்படும் இந்த வீடியோ கேமை டெல்லி பெடரேசன் ஆப் கேமர்ஸ் முன்னிலையில் மும்பையில் அறிமுகம் செய்து வைத்தது உபிசாப்ட். இந்த கேமின் ட்ரெயிலர், இந்த கேமின் கதையில் வரும் ப்ரோட்டோகானிஸ்ட் கானர் மற்றும் அவரது திட்டங்கள் போன்றவற்றை விளக்கியது.

ஆசாஸின் கிரீட் III, டெஸ்மன்ட் கதையின் இறுதி அதிகாரமாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது கானர் போராடி அமெரிக்காவை பிரிட்டிஷ் நாட்டின் அதிகாரத்தில் இருந்து விடுவித்து அமெரிக்காவின் உண்மையான முன்னோர்களைக் கண்டுபிடிப்பதாகவும் மற்றும் அமெரிக்காவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாகவும் இந்த கேம் அமைகிறது.

ஆசாஸின் கிரீட் கேம் பொதுவாக அசாஸின் மற்றும் டெம்பலர்களுக்கு இடையிலான போரை வழங்குகிறது. அதாவது ஆசாஸின் மக்கள் டெம்ப்ளர்களிடமிருந்து விடுதலை அடையப் போராடுகின்றனர். ஆனால் டெம்ப்ளர்கள் அவர்களை அடிமைப்படுத்துகின்றனர்.

ஆசாஸின் கிரீட் II கேம் ப்ளாரன்ஸில் ஏற்பட்ட புதுப்பித்தலை விளக்குகிறது. அதாவது இந்த கேம் எசியோவின் எழுச்சியையும் அவர் எவ்வாறு தனது எதிரிகளைப் பழிவாங்கினார் என்பதையும் ஆசாஸின் கிரீட் II விளக்குகிறது.

இந்த புதிய ஆசாஸின் கிரீட் III கேமை, எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் ப்ளேஸ்டேசன் 3 ஆகியவற்றிலும் விளையாடலாம். அதற்காக ரூ.2,799 கொடுத்து இந்த கேமை வாங்க வேண்டும். மேலும் இந்த கேமின் கணினி வெர்சனை ரூ.999 கொடுத்து வாங்கி கணினியில் விளையாடலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot