Home
Gaming

ஐசிஎஸ் இயங்குதளத்துடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
ஐசிஎஸ் இயங்குதளத்துடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

பல சூப்பரான டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கும் ஆர்க்கோஸ் நிறுவனம் தற்போது ஒரு அழகான வீடியோ விளையாட்டு சாதனத்தைக் களமிறக்க இருக்கிறது. இந்த சாதனத்திற்கு ஆர்க்கோஸ் லுடோ ஜி10 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இது விற்பனைக்கு வரும் போது இதன் பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆர்க்கோஸ் வீடியோ விளையாட்டு சாதனம் அம்சமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த சாதனத்தில் டிஸ்ப்ளே உயர்ந்த பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த இந்த லுடோ சாதனம் 1.8 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் டி1 ஒஎம்எபி 4470 சிப்செட் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகம் தாறுமாறாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இது எல்லா வகையான விளையாட்டுகளையும் சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லுடோ விளையாட்டு சாதனம் பவர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்554 ஜிபியு க்ராபிக்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் க்ராபிக்ஸ் அடிப்படையிலான எல்லா விளையாட்டுகளையும் அம்சமாக இதில் விளையாடலாம்.

இந்த லுடோ சாதனம் இப்போது தயாரிப்பு நிலையில் இருந்தாலும் இதற்கு இப்போதே ஏகப்பட்ட ஏதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X