கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்டும் அப்ளிகசேன்களில் ஆங்கிரி பேர்ட்ஸ் முதலிடம்

Posted By: Karthikeyan
கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்டும் அப்ளிகசேன்களில் ஆங்கிரி பேர்ட்ஸ் முதலிடம்

பிரபல வீடியோ கேம்களைத் தயாரித்து வழங்கும் ரோவியோ நிறுவனம் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் என்ற கேமின் புதிய வெர்சனை நேற்றுக் களமிறக்கியது. அதற்குள் அந்த கேமை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். இதனால் ஆப்பிளின் ஐடியூன்ஸ் அப் ஸ்டோரிலிருந்து கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் கேம் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் ஐஒஎஸ், ஆன்ட்ராய்டு, அமேசான் கிண்டல், விண்டோஸ் போன் 8, விண்டோஸ் 8, மேக் மற்றும் கணினிகளில் இயங்கக்கூடியது. இந்த புதிய வீடியோவில் கோபம் கொண்டிருக்கும் பறவைகள் மற்றும் நட்சத்திர போர்கள் ஆகிய இரண்டு உலகங்கள் இருக்கிறன. இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் நடக்கும் சண்டையை இந்த கேம் விவரிக்கிறது.

மேலும் இந்த கேமை விளையாடும் போது இதை விளையாடுவதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் இந்த கேம் ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கையும் வழங்குகிறது.

இந்த கேமை ஐடியூன்ஸ் ஸ்டோரிலிருந்து ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஐபேடில் பதிவிறக்கம் செய்ய ரூ.170 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஐபோன் மற்றும் ஐபோட் டச் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்ய ரூ.55 செலுத்தினால் போதுமானது.

ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் இந்த கேமை இலவசமாக பதிவறக்கம் செய்யலாம். அதே நேரத்தில் இந்த கேமின் கட்டண எச்டி வெர்சனை ரூ.163.10 செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot