ப்ளாக்பெரி ப்ளேபுக்கில் புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் கேம்!

By Karthikeyan
|
ப்ளாக்பெரி ப்ளேபுக்கில் புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் கேம்!

புதிய புதிய வீடியோ கேம்களை அறிமுகம் செய்யும் ரவியோ என்டர்டைன்மென்ட் லிமிட்டட் கடந்த மாதம் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் எச்டி என்ற ஒரு புதிய வீடியோ கேமை அறிமுகம் செய்து வைத்தது. இப்போது இந்த கேமை வீடியோ கேம் பிரியர்கள் மிக ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால் இந்த ஆங்கிரி பேர்ஸ் ஸ்பேஸ் எச்டி வீடியோ கேம் ப்ளாக்பெரி ப்ளேபுக் தளத்திற்கு வர இருக்கிறது என்பதாகும். இனி ப்ளாக்பெரி ப்ளேபுக்கைப் பயன்படுத்துவோர் இந்த வீடியோ கேமை ப்ளாக்பெரி அப் வேர்ல்டு மூலம் 2.99 அமெரிக்கா டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.157க்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் ராவியோ இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேசின் 10 இலவச லெவல்களை அறிவித்திருக்கிறது. இவற்றை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வசதி கொண்டவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய லெவல்களுக்கு "ப்ரை மி டூ த மூன் " என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டை பயன்படுத்துபவர்கள் இந்த ஆங்கிரி பேர்ட்ஸை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் ஐஒஎஸ்ஸை பயன்படுத்துபவர்கள் 0.99 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52 செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய ஆங்கிரி பேர்ஸ் ஸ்பேஸ் விளையாட்டு வெளியான 3 நாட்களுக்குள் அந்த கேமை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். விரைவில் இந்த கேமை விண்டோஸ் போனிலும் பதிவிறக்கம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது வீடியோ கேமின் குருவான ராவியோ.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X