விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு

ரோவியோ நிறுவனத்தின் படைப்புகளான ஆங்கிரி பேர்ட்ஸ் மற்றும் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பஸ் போன்ற வீடியோ விளையாட்டுகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த கேம்கள் உலக அளவில் பலரால் ஆர்வமுடன் விளையாட்ப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் வரும் அக்டோபர் 26ல் மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தைக் களமிறக்க இருக்கிறது.
அதோடு மேற்சொன்ற இந்த 2 பிரபல கேம்களும் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் களமிறக்க இருக்கின்றன. மேலும் மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்சி்ல் உள்ள கேம்களையும் இந்த புதிய இயங்கு தளத்தில் கொண்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்த ஹால்ப்பிரிக் ஸ்டூடியோவின் பிரபலமான விளையாட்டான ப்ரூட் நிஞ்சாவும் இந்த புதிய இயங்கு தளங்களில் வர இருக்கின்றன. மேலும் 40 விளையாட்டுகள் இந்த புதிய இயங்கு தளத்தில் வர இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. இந்த 40ல் 29 கேம்கள் மைக்ரோசாப்ட் ஸ்டூடியோவில் இருந்து வருகிறது.
மேலும் 4 எலமென்ட்ஸ் II ஸ்பெசல் எடிசன், எ வேர்ல்டு ஆப் கிப்லிங்ஸ், அட்ரியா: எபிசோட்1, 2, 3, ஆங்கிரி பேர்ட்ஸ், ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ், பிக் பக் ஹண்டர் ப்ரோ, ப்ளேஸ்புளூ கலாமிட்டி ட்ரிக்கர், கொலேட்டரல் டேமேஜ், க்ராஷ் கோர்ஸ் கோ, கட் த ரோப், டிஷ்னி பெய்ரிஸ், ட்ராகன் லயர், பீல்டு அன்ட் ஸ்ட்ரீம் பிஷிங், ப்ரூட் நிஞ்சா போன்ற 40 கேம்கள் விண்டோஸ் இயங்கு தளத்தில் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications