ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு குதூகலமூட்டும் புதிய சாதனம்!

Posted By: Karthikeyan
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு குதூகலமூட்டும் புதிய சாதனம்!

ஆட்டிசம் நோயால் துன்புறும் குழந்தைகளுக்காகவே ஒரு புதிய கேமிங் சாதனம் வர இருக்கிறது. இந்த கேமிங் சாதனம் டண்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆட்டிசத்தால் துன்புறும் குழந்தைகள் இந்த கேமிங் சாதனம் மூலம் மற்றவரோடு உரையாடலாம். அதோடு விளையாட்டு மூலம் தங்கள் பெற்றோரோடு தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த முடியும்.

இந்த கேமிங் சாதனத்திற்கு பேசிவ் ப்ளே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த கேமிங் சாதனம் ஒரு பொம்மை க்யூப் ஆகும். இந்த பொம்மை ஐஒஎஸ் அப்ளிகேசனோடு இணைந்து வருகிறது.

தமது குழந்தைகள் எந்த அளவு இந்த கேமிங் சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதை இந்த கேமிங் சாதனத்தின் மூலம் பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். மேலும் ஆட்டிசத்தால் துன்புறும் அந்த குழந்தைகளின் துயரங்களை இந்த சாதனம் துடைத்து அவர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.

இந்த பேசிவ் ப்ளே கேமிங் சாதனம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையையும் தர இருக்கிறது. அதாவது தொழில் நுட்பம் எவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை மற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த கேமிங் சாதனம் உணர்த்துகிறது. இந்த கேமிங் சாதனம் ஒரு சமூக மையம் கொண்ட சமூக சாதனம் என்பதில் ஐயமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot