ஐபோனுக்கான அட்டகாசமான வீடியோ கேம் சாதனம்!

Posted By: Karthikeyan
ஐபோனுக்கான அட்டகாசமான வீடியோ கேம் சாதனம்!

வீடியோ கேம்களை விளையாடுவதற்கு தகுந்த சாதனமாக தற்போது பலர் ஐபோன் சானத்தைப் பெரிதும் விரும்புகின்றனர். ஐஒஎஸ் சாதனங்களில் இயங்கும் பல சாதனங்களில் வீடியோ கேம் விளையாடுவது அருமையாக இருந்தாலும் அந்த சாதனங்கள் விளையாடுவதற்கு போதிய வசதி இல்லாமல் இருக்கிறது.

ஆனால் அந்தக் குறையைத் தீர்க்க ஐபோனுக்கான ஒரு புதிய கேமிங் சாதனம் களம் இறங்க இருக்கிறது. இந்த புதிய விளையாட்டுச் சாதனத்திற்கு ப்ளேட்பேட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தை ஐபோனில் பொருத்திவிட்டால், மிக சூப்பராக வீடியோ கேம் விளையாட முடியும்.

இந்த புதிய விளையாட்டு சாதனம் ஒரு டூவல் அனலாக் ஸ்டிக்குகள் மற்றும் முழு கண்ட்ரோலர் பட்டனையும் கொண்டிருக்கிறது. மேலும் எபிஎக்ஸ்ஒய் பட்டன்கள், ஸ்டார்ட், செலக்ட், டி-பேட் மற்றும் எல்1, எல்2, ஆர்1 மற்றும் ஆர்2 போன்ற விளையாடுவதற்கு ஏற்ற பட்டன்கள் உள்ளன.

இந்த விளையாட்டு சாதனம் விளையாடுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறது. ப்ளூடூத் மூலம் இந்த விளையாட்டு சாதனத்தை ஐபோனில் இணைத்துவிட்டால் போதும். மிக அட்டகாசமாக விளையாட்டுகளை விளையாட முடியும். ஐபோனோடு இணைத்த பிறகு, இந்த வீடியோ சாதனத்தை அதற்கான பெட்டியில் வைத்திருக்க வேண்டும். விளையாடி முடித்த பிறகு அந்த கேமிங் சாதனத்தை அதே பெட்டியில் பாதுகாப்பாக வைக்க முடியும்.

இந்த ப்ளேட்பேட் சாதனம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று பாதுகாப்பு பெட்டி மற்றும் பிரித்து வைக்கக் கூடிய விளையாட்டு சாதனம் என்று இது இரண்டு பகுதிகளாக வருகிறது. இந்த பெட்டியின் மீது ஐபோனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டு சாதனத்தை சார்ஜ் செய்ய ஒரு மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. இந்த சானத்தின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த புதிய சாதனம் பல வீடியோ கேம் பிரியர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot