Home
Gaming

குறி பார்த்து அடிக்கனுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க!

By Super

குறி பார்த்து அடிக்கனுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க!
'தி டார்க் மேன்' என்ற விளையாட்டை ஆன்ட்ராய்டு ஸ்டோரில் அறிமுகம் செய்கிறது 7சீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

தி டார்க் மேன் என்ற இந்த விளையாட்டின் பெயரை கேட்டாலே ஏதோ ஹாலிவுட் திரைப்படம் போல் தோன்றுகிறது.

பொதுவாகவே ஹாலிவுட் திரைப்படங்கள், பார்ப்பவர்களுக்கு திகிலை ஏற்படுத்துவதில் மிக பிரசித்தி பெற்ற ஒன்று. கிட்டத்தட்ட தி டார்க் மேன் என்ற இந்த விளையாட்டு கூட அப்படி தான்.

குறி பார்த்து அடிப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே. அந்த வேலையை இந்த விளையாட்டில் செய்யலாம்.

ஒரு மனிதன் தலையில் ஆப்பிளை வைத்து கொண்டு நிற்பான். இந்த ஆப்பிளை நாம் குறி பார்த்து அடிக்க வேண்டும். அப்படி சரியாக இலக்கை குறி வைத்து அடித்து விட்டால் மதிப்பெண்களை தட்டி செல்லலாம். இது போல் அடுத்த அடுத்த கட்டங்களில் நமது திறமைகளை காட்டலாம்.

ஆர்வத்தினை அதிகப்படு்ததும் இந்த விளையாட்டினை ஆன்ட்ராய்டு ஸ்டோரில் டவுன்லோட் செய்யலாம். ஆன்லைன், சமூக வலைத்தளம் என்று அதிக பேரால் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு, இது வரை 1.5 கோடி பேரால் விளையாடப்பட்டுள்ளதாக 7சீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மாருதி ஷன்கர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வலைத்தளங்களில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு, இப்போது ஆன்ட்ராய்டு மார்கெட் ஸ்டோரில் பெறலாம். 10 லெவல் வரை இந்த விளையாட்டினை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இதில் மொத்தம் 30

லெவல் வரை உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ரூ. 55 விலையில் இந்த விளையாட்டை முழுமையாக டவுன்லோடு செய்யலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X