அட்டகாசமான வீடியோ விளையாட்டிற்கு புதிய மானிட்டர்!

Posted By: Staff
அட்டகாசமான வீடியோ விளையாட்டிற்கு புதிய மானிட்டர்!

வீடியோ விளையாட்டுகளுக்கு உலக உளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்களுடைய புதிய வீடியோ விளையாட்டுகளையும் அதே நேரத்தில் தங்களுடைய வீடியோ விளையாட்டுச் சாதனங்களையும் களமிறக்கி வருகின்றன.

அந்த வகையில் இசோ நிறுவனம் ஒரு புதிய 23 இன்ச் விளையாட்டு மானிட்டரைக் களமிறக்குகிறது. இந்த மானிட்டருக்கு போரிஸ் எப்எஸ்2333 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அகன்ற திரையாக இருக்கும் இந்த மானிட்டரில் சூப்பராக வீடியோ விளையாட்டுகளை விளையாடலாம். அதே நேரத்தில் புதிதாக வரும் நவீன விளையாட்டுகளையும் விளையாடலாம்.

அதோடு இந்த மானிட்டர் அட்டகாசமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. மேலும் இந்த மானிட்டரை ரிமோட் கொண்டு இயக்கலாம். இந்த மானிட்டரி முழுமையான ஐபிஎஸ் எச்டி வசதி கொண்டது. இதன் ரிசலூசனும் பக்காவாக இருக்கும். மேலும் இந்த மானிட்டர் மிகத் துல்லியமாக இருக்கும். அதோடு முதல் பார்வையிலேயே இந்த மானிட்டர் பிரமிப்பை ஏற்படுத்தும்.

இந்த புதிய விளையாட்டு மானிட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot