20 விதமா சாம்சங் புதிய டிவி மாடல்களில் ஏ.எம்.டியின் பிரீசிங்க் சாப்ட்வேர்.!
சாம்சங் புதிய டிவிக்கள் அனைத்தும் கேம்ஸ் சப்போர்ட் செய்யும் வகையில் ஏ.எம்.டி ரேடியோன் டெக்னாலஜியை கொண்டது.
சாம்சங் நிறுவனம் ஏ.எம்.டி நிறுவனத்துடன் இணைந்து 20 விதமான வித்தியாசமான க்யூ.எல்.ஈ.டி டிவி மாடல்களை 55 இன்ச் முதல் 82 இன்ச் வரையிலான டிவிக்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த டிவிக்கள் அனைத்து 4கே ஹெச்.டி.ஆர் பேனல்களை உடையது என்பதும், கேம்ஸ் சப்போர்ட் செய்யும் வகையில் ஏ.எம்.டி ரேடியோன் டெக்னாலஜியை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவொரு மல்டிமீடியா சாதனம் ஆகும். மேலும் இந்த டிவி மாடல்கள் அனைத்தும் 1000 நிட்ஸ் பிரைட்னெஸ் கொண்டது என்பதும் அதிகபட்ச ரெப்ரெஷ் ரேட்டிங்கை கொண்டதும் என்பதும் கூடுதல் சிறப்பு.

ஏ.எம்.டியின் இந்த ஃப்ரீசிங் டெக்னாலஜி மூலம் இந்த சாதனம் டெவலப் செய்யப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டரிலும் ஜிபியு போன்று செயல்படும் தன்மைகளை கொண்டது. தற்போதைக்கு எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் ஆகியவை இந்த ப்ரீசிங்க் டெக்னாலஜிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. இந்த டெக்னாலஜி பயன்படுத்துவதை நீங்கள் அதன் டிஸ்ப்ளேவில் தோன்றும்போது அறிந்து கொள்ளலாம். ப்ரீசிங்க் டெக்னாலஜி என்பது ஹார்ட்வேர் மட்டுமின்றி இதுவொரு சாப்ட்வேரும் கூட என்பதும், இது ப்ரேம் ட்ராப்பை குறைப்பதோடு ஸ்க்ரீனை அதிக நேரம் பார்த்தாலும் கண்கள் கெடாத வகையில் அமைக்கப்பட்டுள்ள டெக்னாலஜி ஆகும்
இந்த ஃப்ரீசிங்க் டெக்னாலஜி ஏற்கனவே வெளிவந்துள்ள சாம்சங் க்யூ.எல்.ஈ.டி டிவி மாடல்களான மாடல் நம்பர் NU8000 / NU8500 ஆகியவற்றில் உள்ளது. இந்த டிவிக்களின் டிஸ்ப்ளே 52 இன்ச் முதல் 82 இன்ச் வரை இருக்கும். இந்த மாடல்கள் டிவிக்களில் இருக்கும் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் ஜூன் 6ஆம் தேதி முதல் இதில் உள்ள சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமெட்டிக் கேமர் மோட் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவி மாடல்கள் குறித்து ரேடியான் டெக்னால்ஜிஸ் குரூப்பின் துணை தலைவர் மற்றும் பொது மேலாளர் கூறுவதாவது: நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் கேமர் அல்லது பிசி டிஸ்ப்ளே அல்லது அறையில் உள்ள டிவி ஆகியவற்றை தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக ரெடியான் சிங்க் டெக்னாலஜி சக்தி கொண்ட இந்த டிவிக்களை வாங்கலாம். நாங்கள் இந்த ப்ரீசிங்க் டெக்னாலஜியை உங்களுக்கு அறிமுகம் செய்வதால் நீங்கள் கேமிங் விளையாடும்போது ஒருபுதுவித அனுபவத்தை பெறுவீர்கள். இந்த டெக்னாலஜியில் நீங்கள் கேம் விளையாடும்போது ஸ்மூத் மற்றும் விஷூவலாக எந்தவித பிரச்சனையும் உங்களுக்கு நேராது.
சாம்சங் நிறுவனத்தின் சீனியர் துணைத்தலைவர் சூ ஜொங்சங் கூறியதாவது; ஆரம்பம் முதலே நாங்கள் இந்த ப்ரீசிங்க் டெக்னாலஜியை தொடர்ந்து எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் சேர்த்து வருகிறோம். ஏ.எம்.டி டெலிவரி செய்யும் இந்த டெக்னாலஜி மூலம் புதுவிதமான கேமிங் அனுபவங்களை நீங்கள் பெறலாம். எங்கள் வாடிக்கையாளர்கள் நிச்சயம் மிகச்சிறந்த விஷூவல் குவாலிட்டியை பெறுவார்கள். மேலும் ஒரு ஸ்மூத் கேமிற்கு இது தக்க வழிகாட்டியாக இருக்கும். இந்த டெக்னால்ஜியில் சாம்சங் டிவிக்களை உங்களுக்கு அளிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

எக்ஸ்பாக்ஸ் கன்சோல் மார்க்கெட்டிங் ஜெனரல் மேனேஜர் மாத்யூ லேப்சன் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'ஏ.எம்.டி மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நீண்ட வரலாற்றினை கொண்ட ஒரு ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்களை கொண்ட நிறுவனங்கள். இவை இரண்டும் கேம்ஸ் பிரியர்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும். எங்களுடைய எக்ஸ்பாக்ஸ் பிளாட்பார்மில் இந்த ப்ரீசிங்க் டெக்னாலஜியை இணைப்பதில் பெருமை அடைகிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் ஒருபுதுவித ஸ்மூத் லுக்கிங் கேம்ஸ்களை எங்களுடைய எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் மூலம் விளையாடுவார்கள் என்பதை உறுதி கூறுகிறோம்.


Click it and Unblock the Notifications