ஜெப்ரானிக்ஸ்: அட்டகாசமான ஜெப் ப்ரிஸம் ப்ளூடூத் ஆர்ஜிபி எல்.இ.டி ஸ்பீக்கர்.!
ஜெப் ப்ரிஸம் என அழைக்கப்படும் ஜெப்ரானிக்ஸ் இன் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆர்.ஜி.பி. எல்.இ.டி அம்சம் மற்றும் டச் கன்ட்ரோல் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தரம் மிக்க கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உபகரணங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் பிரபல நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஜெப் ப்ரிஸம் என அழைக்கப்படும் ஜெப்ரானிக்ஸ் இன் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆர்.ஜி.பி. எல்.இ.டி அம்சம் மற்றும் டச் கன்ட்ரோல் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜெப்ரானிக்ஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர்
புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் லான்டர்ன் விளக்கு போன்று வடிவமைத்துள்ளது. கேபாசிட்டிவ் டச் கன்ட்ரோல் மற்றும் மென்மையான எல்.இ.டி. மின்விளக்குடன் தெளிவான இசை அனுபவத்தை வழங்குகிறது.

32ஜிபி மெமரி கார்டு
புதிய ஸ்பீக்கர் ஐ உங்கள் அனைத்து ஸ்மார்ட் தயாரிப்புகளுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்பீக்கர் இல் மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. 32ஜிபி வரையிலான மெமரி கார்டு மூலம் உங்கள் இசையை இசைக்க முடியும்.

எப்எம் சேவை
உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் மென்மையான ஆர்.ஜி.பி எல்.இ.டி. விளக்குகளுடன் பல வண்ணங்களில் மாற்றுவதற்கான சேவையையும் வழங்குகிறது. இதில் உங்களுக்கு எப்எம் சேவையும் இணைக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால்ஸ் ஸ்பீக்கர்
இத்துடன் இந்த ஜெப்ரானிக்ஸ் இன் ஜெப் ப்ரிஸ்ம் ப்ளூடூத் ஸ்பீக்கர் இல் ஆக்ஸ் சேவை மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்பட்டிருக்கிறது. வாய்ஸ் கால்ஸ் பேசுவதற்கு ஸ்பீக்கர் இல் இன்பில்ட் மைக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

டச் பட்டன்
விளக்கின் நிறத்தை மாற்றுவதற்கு டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது இத்துடன் ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும் / குறைக்கவும் டச் பட்டன்கள் பொறுத்தப்பட்டுளள்து.

ஜெப் ப்ரிஸ்ம் ப்ளூடூத் ஸ்பீக்கர்
ஜெப் ப்ரிஸ்ம் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் ரூ.2,499 க்கு கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் உடன் உங்களுக்கு சார்ஜிங் கேபிள் மற்றும் ஆக்ஸ் கேபிள் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த ஸ்பீக்கர் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications