Home
Gadgets

அதிரவிடும் விலை.. 16ஜிபி மெமரி.. ஆண்ட்ராய்டு 9.. அறிமுகமானது புதிய ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தரமான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 (Zebronics Zeb Pixaplay Pro 500) எனும் புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய புரொஜெக்டர் ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக இருக்கிறது. இப்போது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது புதிய ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 அம்சங்கள் (Zebronics Zeb Pixaplay Pro 500 Specifications): ஃபுல் எச்டி (FHD) ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த புதிய புரொஜெக்டர் மாடல். மேலும் இதில் 1920 x 1080 பிக்சல்ஸ், 12500 லுமென்ஸ் பிரைட்னஸை (Lumens Brightness), 20,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் இந்த அட்டகாசமான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 புரொஜெக்டர் மாடல். அதேபோல் இதில் 90 இன்ச் வரையில் ஸ்கிரீன் புரொஜெக்சன் கிடைக்கிறது. எனவே இந்த பெரிய திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் சிறந்த பிக்சர் குவாலிட்டி இதில் உள்ளது.

குவாட்-கோர் பிராசஸர் (Quad-Core Processor) உடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் DLP எனும் டிஸ்பிளே டெக்னாலஜி (Display Technology) கொண்டுள்ளது புதிய புரொஜெக்டர். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 9 வெர்ஷன் உடன் இந்த புதிய புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சாதனத்தில் பல்வேறு பதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

எலக்ட்ரானிக் ஃபோகஸ் ரிமோட் (Electronic focus remote), நேவிகேஷன்-க்கான ஏர் மவுஸ் (Air Mouse feature for navigation), இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் (Built-in speakers), மிராகாஸ்ட் (Miracast), iOS ஸ்கிரீன் காஸ்டிங் ( iOS screen casting)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடலில் உள்ளன.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது புதிய ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, இரண்டு யுஎஸ்பி போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடலில் உள்ளன. பின்பு இந்த சாதனத்தின் எடை 756 கிராம் ஆகும். மேலும் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடலுக்கு 1 வருடம் வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்ஸாபிளே ப்ரோ 500 மாடலை ரூ.69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த புத்தம் புதிய ஜெப்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடலை வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics Zeb Pixaplay Pro 500 Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X