Home
Gadgets

மெகா ஆஃபரில் Zebronics 4கே ப்ரொஜெக்டர்.. 200 இன்ச்.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics ZEB PixaPlay 77G Smart Projector) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 67 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1750 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மெகா ஆஃபரில் Zebronics 4கே ப்ரொஜெக்டர்.. 200 இன்ச்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics ZEB PixaPlay 77G Projector Specifications): ஃபுல் எச்டி (FHD) 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் 7500 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் 270 டிகிரி டில்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இந்த 100-இன்ச், 150-இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட் கோர் பிராஸசர் (Quad core processor) உடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இயங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இந்த சாதனத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar) போன்ற அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். இதுதவிர கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் டிஆர்எம் எல்1 (DRM L1) போன்ற ஆதரவுகளும் இதில் உள்ளது.

மெகா ஆஃபரில் Zebronics 4கே ப்ரொஜெக்டர்.. 200 இன்ச்.. எந்த மாடல்?

லென்ஸ் ஷீல்டு, ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட ஆதரவு கொண்டுள்ளது இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். இதுதவிர 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவுடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Zebronics ZEB PixaPlay 77G Projector is available at a 68 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X