பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2026.. ரூ.9999 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. 200 இன்ச்... எந்த மாடல்?
ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் மாடல் முன்பு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் மாடல் ஆனது முன்பு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த மாடல் ரூ.9999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 அம்சங்கள் (Zebronics Zeb Pixaplay 65 Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 மாடல் . எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் இது ஒரு கிளியர் அவுட்புட் கொடுக்கும் எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும்.
அதுவும் ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 மாடலில் 8500 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ்.
குறிப்பாக ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
சக்திவாய்ந்த குவாட் கோர் பிராஸசர் (Quad core processor) உடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு (Smart Android) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர். எனவே இந்த சாதனத்தில் அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.
மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 மாடல். பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) மற்றும் ஸ்மார்ட் வெர்டிகல் கரெக்சன் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சாபிளே 65 மாடல். எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான வசதிகளும் இந்த சாதனத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications