Home
Gadgets

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 250 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் (Zebronics Zeb Pixa Play 38 Projector) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 மாடலுக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகனை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்..  ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Zeb Pixa Play 38 Projector Specifications): 1080 பிக்சல்ஸ் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ஆதரவுடன் இந்த புதிய ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஜெப்ரானிக்ஸ் புரொஜெக்டர்.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் ஆனது 12000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியை வழங்குகிறது. பின்பு இதில் உள்ள உள்ள எல்இடி Lamp மூலம் 30,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்றுக் கொள்ளலாம். கிரிஸ்டல் கிளியர் விஷூவல், விவிட் (vivid) சப்போர்ட் வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கலாம்.

90° டில்ட் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் மாடல். மேலும் குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செய்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. இதுதவிர ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்..  ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

புளூடூத் வி5.4, டூயல் பேண்ட் வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. பின்பு இந்த சாதனத்துடன் ஒரு ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

கேமிங் பயனர்களை கவரும் வகையில் பல மேம்பட்ட அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 38 ப்ரொஜெக்டர் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Zebronics Zeb Pixa Play 38 Projector is available at a 68 percent discount on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X