Home
Gadgets

நான் அடிச்சா தாங்க மாட்ட.. 1030W சவுண்ட் பார்.. டால்பி அட்மாஸ், DTS:X உடன் Zebronics செஞ்சிட்டான்.. என்ன விலை?

ஸெப்ரானிக்ஸ் (Zebronics) நிறுவனம், இந்தியாவில் தனது ஹோம் ஆடியோ சீரீஸில் (Home Audio Series) ஒரு புதிய பிளாக்ஷிப் சவுண்ட்பாரை (Flagship soundbar) சேர்த்து உள்ளது. அது ஸெப்-ஜுக் பார் 9890 (ZEB-Juke Bar 9890) மாடல் ஆகும். இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் ஒரு 5.1.2 சேனல் சிஸ்டம் (5.1.2 channel system) ஆகும்.

ஸெப்ரானிக்ஸ் ஸெப்-ஜுக் பார் 9890 மாடலின் விரிவான அம்சங்கள்: இந்த சிஸ்டம் மொத்தமாக 1030W ஆர்எம்எஸ் அவுட்புட்டை (1030W RMS output) கொண்டு உள்ளது, இது சில வெவ்வேறு பாகங்களுக்கு (different components) இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. பிரதான சவுண்ட்பார் யூனிட்டில் ஐந்து டிரைவர்கள் உள்ளன.

1030W சவுண்ட் பார்! டால்பி அட்மாஸ், DTS:X உடன் Zebronics செஞ்சிட்டான்!

ஸ்பேஷியல் ஆடியோ பார்மெட்களுக்கு (spatial audio formats) தேவையான ஹேட் சேனல்களை (High channels) கையாள, அவற்றில் மூன்று பேஸிங் பார்வேட் (facing forward), இரண்டு பாயின்ட்டிங் அப்வேர்ட் (pointing upward) ஆகவும் அமைந்துள்ளன. இந்த தொகுப்பில் இரண்டு ரியர் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் (rear satellite speakers) மற்றும் ஒரு 8-இன்ச் (20.32 செ.மீ) சப்வூஃபரும் (8-inch subwoofer) அடங்கும்.

ரியர் ஸ்பீக்கர்களும் சப்வூஃபரும் பிரதான பாருடன் வயர்லெஸ்ஸாக (Wireless) இணைக்கப்படுவதால், ஒரு அறையில் இதற்காக தேவைப்படும் கேபிள்களின் அளவு குறைகிறது, இது இனிஷியல் செட்டப்பை (initial setup) சற்று எளிதாக்குகிறது. ஆடியோ செயலாக்கத்திற்காக, இந்த சவுண்ட்பார் அதன் அப்-பையரிங் டிரைவர்களை (up-firing drivers) நம்பி இருக்கிறது, இது ஒலியை கூரையில் பட்டு எதிரொலிக்க (bounce sound off the ceiling) செய்கிறது.

இதன் மூலம் டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் டிராக்குகளுக்கு மேல்நிலை ஆடியோவை உருவகப்படுத்துகிறது. மேலும் ஸெப்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது சரவுண்ட் சவுண்ட் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Zeb-AcoustiMax எனப்படும் அதன் சொந்த இன்டர்னல் ஆடியோ ப்ராசஸிங்கையும் கொண்டுள்ளது.

வெளித்தோற்றத்தில், இந்த சவுண்ட்பார் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் அடர் நிற துணி உறையால் மூடப்பட்டுள்ளன. இது, இந்த டிவைஸ் - ஒரு அறையில் உள்ள சாதாரண பொருட்களுடன் இயல்பாக பொருந்திப் போக உதவும் ஒரு பொதுவான வடிவமைப்பு தேர்வாகும். பிரதான பாரின் முன்பக்கத்தில் தற்போதைய இன்புட் அல்லது ஒலியளவைக் காட்ட ஒரு அடிப்படை எல்இடி டிஸ்பிளே (Basic LED Display) உள்ளது. மேலும் இந்த யூனிட்டை சுவரில் பொருத்துவதற்கு தேவையான வன்பொருளும் இதில் அடங்கும்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒரு நவீன டிவி அமைப்பிற்கான நிலையான தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்தையும் கொண்டு உள்ளது. இதன் முதன்மை இணைப்பு எச்டிஎம்ஐ இஆர்க் (HDMI eARC) ஆகும், இது அதிக அலைவரிசை கொண்ட ஆடியோ வடிவங்களை டிவியிலிருந்து நேரடியாக அனுப்ப அவசியமானது.

மேலும் இதில் ஆப்டிகல் இன்புட், 3.5மிமீ ஆக்ஸிலரி ஜாக் (3.5mm auxiliary jack) மற்றும் ஃபிளாஷ் டிரைவிலிருந்து எம்பி3 பைல்களை இயக்குவதற்கான யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. கடைசியாக ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து வயர்லெஸ் ஆடியோவை இயக்குவதற்கு, இது ப்ளூடூத் 5.3-ஐ பயன்படுத்துகிறது.

ஸெப்ரானிக்ஸ் ஸெப்-ஜுக் பார் 9890 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஸெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் சவுண்ட்பாரின் விலை ரூ.29,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள் ஆன அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Zebronics ZEB Juke Bar 9890 Soundbar With 1030W output Launched in India Price Features Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X