ஜெப்ரானிக்ஸ் புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர் போனை அறிமுகபடுத்தப்படுகிறது..

|

ஜெப்ரானிக்ஸ் அதன் புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர் போனை 'ஜெப்-ஜர்னி' யை அறிமுகபடுத்தப்படுகிறது..

13 மணி நேரங்களுக்கு தடையில்லா இசையை கேட்டு மகிழுங்கள் அல்லது குரல்உதவியைப் பெறுங்கள், 'ஜெப்-ஜர்னி' மூலம் நீங்கள் அனைத்தையும் செய்யலாம்.

ஜெப்ரானிக்ஸ்  புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர்போன் அறிமுகம்

தகவல் தொழில் நுட்பம் துறையி்ல் தனது தயாரிப்புகளான தொழில் நுட்பம் சாதனங்கள், ஒலிஅமைப்பு, மொபைல் / வாழ்க்கை துணை உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் என தயாரித்து முத்திரை பதித்த இந்தியாவின் முன்னணி ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் , மற்றொரு புதிய ஒரு இயர் போனை கழுத்து பட்டைவடிவில் 'ஜெப்-ஜர்னி' என்றபெயரில் அறிமுகம்

செய்து இருக்கிறது.

உங்களின் கவலையான நேரங்களில், இந்த இயர்போன் ஜோடி உங்கள் மனதில் சிறந்த இசை மழையைப் பொழிந்து அதிசயம் நிகழ்த்தக்கூடும். வயர் இல்லாத இயர் போன்கள் உங்கள் வாழ்வை மாற்றக்கூடும், எங்கள் ஜெப்-ஜர்னி இது உங்களுக்கு சிறப்பு இசை மற்றும் ஒலி அனுபவத்தை தரும் மேலும் உங்களை குரல் உதவி அனுபவத்தைக் கொண்டு சந்தோஷமடைய செய்யும் மேலும் இது தொடர்ந்து 13 மணி நேரம் இயங்கும் ஆற்றல் கொண்டது.

'ஜெப்-ஜர்னி' இயர்போன்கள் உங்கள் கழுத்தில் சரியாக பொருந்தும் வகையில் வளைவாக உருவாக்கப்பட்டுள்ளது இது நீங்கள் நடைப்பயிற்சி அல்லது ஒட்டப்பயிற்சி செய்யும் போது மிகவும் சௌகரியத்தைக் கொடுக்கிறது; இந்த இயர் போன்களின் காது மொட்டுப்பகுதிகள் மென்மையாகவும் காதுதுளையில் எளிதாக அமையும்; தடையில்லாமல் அனுபவத்தை தரக்கூடிய இந்த இயர்போனின் மூலம் உங்களின் இனிய நாள் தொடங்கட்டும்.

வயர்-லெஸ் வசதியை தவிர்த்து இந்த 'ஜெப்-ஜர்னி' யில் மேலும் அதிக வசதிகள் உள்ளது ; இதில் ஆண்ட்ராயிட் மற்றும் iOS போன்களுக்கு குரல் உதவி வசதி உள்ளது இது உங்களுடைய ஒலி/கேட்கும் திறனை மேம்படுத்துகிறது. கேள்விகளை கேளுங்கள், பல வழிகளை தேடுங்கள் அல்லது பாடலைக் கேளுங்கள், இந்த குரல் உதவி தொழில்நுட்பம் இவை அனைத்தையும் செய்ய உதவி செய்யும்.

ஜெப்ரானிக்ஸ்  புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர்போன் அறிமுகம்

இந்த புதிய உபகரணத்தை அறிமுகப்படுத்தி பேசிய இந்த நிறுவனத்தின் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறுகையில், "வயர்-இல்லா தொழில்நுட்ப புரட்சியை தவிர்த்து, அதைவிட விட ஒரு சிறந்த, வயர் இல்லாத போன்கள் தொழிநுட்பத்தில் உச்ச கட்டமாக இது கருதப்படுகிறது. எங்களுடைய இந்த 'ஜெப்-ஜர்னி' என்னும் புதிய படைப்பில், குரல் உதவி எனும் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் அதிகமாக செயல்படலாம் மேலும் இது அதிக நேரம் இயங்கக்கூடிய வல்லமை கொண்டது, இசை பிரியர்களுக்காகவே சிறப்பாக

தயாரிக்கப்பட்டது.

இந்த வயர் இல்லாத இயர் போன் கருப்பு நிறத்தில் வருகிறது மேலும் இது இந்தியாவின் முன்னணி விற்பனை

தளங்களில் விற்பனைக்கு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zebronics Zeb-Journey earphones with voice assistance launched for Rs 1399: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X